World Cup 2023: ஷதாப் கான் உள்ளே- டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்! கூடுதல் ஸ்பின்னருடன் களமிங்கும் ஆப்கானிஸ்தான்
World Cup 2023, AFG vs PAK Live :சென்னை ஆடுகளத்தை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான் அணியில் கூடுதல் ஸ்பின்னராக நூர் அகமது களமிறக்கப்படுகிறார். இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாடுகிறார். பாகிஸ்தானிலும் கடந்த போட்டியில் கழட்டிவிடப்பட்ட ஷதாப் கான் இன்று அணிக்கு திரும்பியுள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடரின் 22வது போட்டி ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பகலிரவு சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது நவாஸுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக ஷதாப் கான் அணியில் இடம்பிடித்துல்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியிலும் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் பாரூக்கிக்கு பதிலாக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் நூர் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று போட்டி நடைபெற இருக்கும் ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இல்லாத நிலையில் ஸ்பின் பவுலர்களுக்கு நன்கு கைகொடுக்கும் எனவும், வழக்கத்தை விட மிகவும் மெதுவாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளன. எனவே வெற்றிக்கான தாகத்துடன் இந்த இரண்டு அணிகளும் களமிறங்குகின்றன.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் மோதிய ஒரு முறையும் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
ஆப்கானிஸ்தான்: ரஹ்மனுல்லா குர்பாஸ், இம்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), செளத் ஷாகில், இப்திகார் அகமது,உஸ்மா மிர், ஷதாப் கான், ஷாகின் அப்ரிடி, ஹசான் அலி, ஹரிஸ் ராஃப்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்