ஸ்டார்க் அசுர வேகம்.. தட்டி தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்! பகலிரவு டெஸ்டில் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க முடியல
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஸ்டார்க் அசுர வேகம்.. தட்டி தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்! பகலிரவு டெஸ்டில் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க முடியல

ஸ்டார்க் அசுர வேகம்.. தட்டி தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்! பகலிரவு டெஸ்டில் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க முடியல

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 06, 2024 03:04 PM IST

மிட்செல் ஸ்டார்க் வேகத்தை சமாளிக்க முடியாமல் தவித்த இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். முதல் போட்டியில் அதிரடியில் மிரட்டிய நிதிஷ் குமார் ரெட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்தார்.

ஸ்டாக் அசுர வேகம்.. தட்டி தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்! பகலிரவு டெஸ்டில் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க முடியல
ஸ்டாக் அசுர வேகம்.. தட்டி தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்! பகலிரவு டெஸ்டில் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க முடியல (AFP)

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடக்கிறது. பிங்க் பந்து டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியிருக்கும் நிலையில், முதல் போட்டியில் களமிறங்காத அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் விளையாடுகிறார்.

அதேபோல் இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்டார்க் வேகத்தில் சுருண்ட இந்தியா

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 44.1 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ்குமார் ரெட்டி 42, கேஎல் ராகுல் 37, சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்தனர்.

ஸ்டார்க் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஸ்டார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ், ஸ்காட் போனாந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்திய பேட்டிங் சரிவு

ஆஸ்திரேலியா வேகம் மிட்செல் ஸ்டார் வீசிய இந்த ஆட்டத்தின் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையை கட்டினார் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.  இரண்டாவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் - சுப்மன் கில் நிதானமாக பேட் செய்து ரன்களை சேர்த்தனர். இருவரும் இணைந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பின்னர் வந்த கோலி 7, பண்ட் 21 ரன்கள் அடித்துவிட்டு நடையை கட்டினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் நங்கூரமிட்டு ஆட முயற்சித்த போதிலும் 3 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். 100 ரன்களுக்குள் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்தது. 

பின்னர் பின்னர் அஸ்வின் - நிதிஷ் குமார் ரெட்டி இணைந்து விக்கெட் சரிவை தடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்காவாறு ஆஸ்திரேலியா பவுலர்கள் பார்த்துக்கொண்டனர். அஸ்வின் 22 ரன்கள் அடித்த நல்ல பங்களிப்பை அளித்தார். இருப்பினும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இரவு வருவதற்குள்ளாவே இந்தியாவின் இன்னிங்ஸை முடித்தனர் ஆஸ்திரேலியா பவுலர்கள்

ஆஸ்திரேலியா நிதானம் 

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவை விட 94 ரன்கள் பின் தங்கியிருக்கும் நிலையில், கைவசம் 9 விக்கெட்டுகளை வைத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் ஓபனரான உஸ்மான் கவாஜா 13 ரன்களில் பும்ரா வீசிய அற்புதமான பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய பவுலர்களில் பும்ரா 11 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.