Abhishek Sharma : அபிஷேக் சர்மாவின் சரவெடி ஆட்டம்.. டி20I வரலாற்றில் இந்தியர் அடித்த இரண்டாவது வேகமான சதம்
Abhishek Sharma : இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் ஜெயித்து இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் புகுந்த அபிஷேக் சர்மா சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Abhishek Sharma : 5வது டி20 போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி20 வரலாற்றில் ஒரு இந்தியர் அடித்த இரண்டாவது வேகமான சதத்தை அபிஷேக் சர்மா அடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார் அபிஷேக் சர்மா.
இதற்கு முன்பு ரோஹித் சர்மா 35 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி இருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக குறைந்த பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச டி20இல் சதம் விளாசிய வீரர் என்ற பெயரை எடுத்தார் அபிஷேக் சர்மா. அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் குரலெழுப்பி வாழ்த்தினர். சக இந்திய வீரர்களும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டாஸ் வென்று பவுலிங் தேர்வு
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்பட்டார்.