United states vs Canada: 95 பந்துகளில் 121 ரன்கள்.. கடைசி வரை நாட் அவுட்.. தெறிக்கவிட்ட அமெரிக்கா கேப்டன்!-121 runs off 95 balls not out till the end good cricket match for america team captain - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  United States Vs Canada: 95 பந்துகளில் 121 ரன்கள்.. கடைசி வரை நாட் அவுட்.. தெறிக்கவிட்ட அமெரிக்கா கேப்டன்!

United states vs Canada: 95 பந்துகளில் 121 ரன்கள்.. கடைசி வரை நாட் அவுட்.. தெறிக்கவிட்ட அமெரிக்கா கேப்டன்!

Manigandan K T HT Tamil
Aug 14, 2024 12:53 PM IST

CAN vs USA: அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்சன் அதிரடியாக ஆடி அரை சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார். ஹர்ஷ் தகெர், தில்லான் ஹேலிகர் ஆகியோரும் அரை சதம் பதிவு செய்தனர்.

United states vs Canada: 95 பந்துகளில் 121 ரன்கள்.. கடைசி வரை நாட் அவுட்.. தெறிக்கவிட்ட அமெரிக்கா கேப்டன்! (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)
United states vs Canada: 95 பந்துகளில் 121 ரன்கள்.. கடைசி வரை நாட் அவுட்.. தெறிக்கவிட்ட அமெரிக்கா கேப்டன்! (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP) (AFP)

நேற்று நெதர்லாந்தின் வூர்பர்க்கில் நடந்த இப்போட்டியில் கனடா டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் யுஎஸ்ஏ விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் யுஎஸ்ஏ 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன்களைக் குவித்தது.

கேப்டனும் விக்கெட் கீப்பருமான மோனக் படேல் கடைசி வரை அவுட்டாகாமல் 95 பந்துகளில் 121 ரன்களை குவித்தார். இவர் 5 சிக்ஸர்களையும் 7 போர்ஸையும் பறக்கவிட்டார்.

அடுத்த படியாக ஸ்மித் படேல், 63 ரன்கள் விளாசினார். ஷயான் ஜகாங்கீர் அரை சதம் பதிவு செய்து அசத்தினார்.

305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கனடா அணி களத்தில் குதித்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்சன் அதிரடியாக ஆடி அரை சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார். ஹர்ஷ் தகெர், தில்லான் ஹேலிகர் ஆகியோரும் அரை சதம் பதிவு செய்தனர்.

எவ்வளவோ போராடியும் கனடாவால் இலக்கை எட்ட முடியவில்லை. எனினும், அந்த அணி 50 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்களை சேர்த்தது. இவ்வாறாக யுஎஸ்ஏ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

அதிகபட்சமாக நோஸ்துஷ் 3 விக்கெட்டுகளை யுஎஸ்ஏ சார்பில் வீழ்த்தினார்.

இந்தக் கிரிக்கெட் போட்டியில் முடிவு கூகுளில் டிரெண்டிங்கில் உள்ளளது. அதாவது அதிகம் பேர் இந்த முடிவை வாசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் டிரெண்டிங் வரைபடம்

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2

2024-2026 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 என்பது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 இன் இரண்டாவது பதிப்பாகும், இது 2027 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் செயல்முறையின் ஒரு பகுதியாகும். சூப்பர் லீக் கைவிடப்பட்டதன் விளைவாக, இந்த லீக் 2 சுழற்சியானது 7ல் இருந்து 8 அணிகளாக அதிகரித்தது. அணிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு மொத்த போட்டிகளின் எண்ணிக்கையை 126ல் இருந்து 144 ஆக அதிகரிக்க வழிவகுத்தது. ஸ்காட்லாந்து நடப்பு சாம்பியனாக போட்டியில் நுழைந்தது.

முந்தைய உலகக் கோப்பை தகுதிச் சுழற்சியில் லீக் 2 சாம்பியனை சூப்பர் லீக்கிற்கு உயர்த்த அனுமதித்தது. இருப்பினும், அந்தப் போட்டியின் ஸ்க்ராப்பிங், முந்தைய லீக் 2 சாம்பியன்களான ஸ்காட்லாந்து இந்தப் போட்டியில் தொடர்ந்து இருந்தது, மேலும் சூப்பர் லீக்கில் விளையாடிய நெதர்லாந்து சேர்க்கப்பட்டது. அவர்களுடன் முந்தைய லீக் 2 மற்றும் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ப்ளே-ஆஃப் இலிருந்து மீதமுள்ள முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள் இணைந்தனர். ப்ளே-ஆஃப் கனடாவுக்கு ப்ரோமோட் ஆனது, பப்புவா நியூ கினியா சவால் லீக்கிற்குத் தள்ளப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிப்ரவரி 2024 இல் முத்தரப்பு போட்டிகளின் அட்டவணையை அறிவித்தது. ஒவ்வொரு நாடும் மூன்று தொடர்களை நடத்தும், மேலும் ஆறு தொடர்களை சொந்த மண்ணிற்கு வெளியே விளையாடும் (மொத்தம் 36 போட்டிகள்). அணிகள் போட்டியிடும் மற்ற நாடுகளில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் முத்தரப்பு தொடரில் விளையாடும்.

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.