Lord Shani: சனி அஸ்தமித்துக் கொட்டும் பணமழை.. கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Shani: சனி அஸ்தமித்துக் கொட்டும் பணமழை.. கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்!

Lord Shani: சனி அஸ்தமித்துக் கொட்டும் பணமழை.. கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 11, 2025 01:50 PM IST

Lord Shani: சனி பகவானின் கிரக நிலையானது. அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சனிபகவானின் அஸ்தமனத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Shani: சனி அஸ்தமித்துக் கொட்டும் பணமழை.. கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்!
Lord Shani: சனி அஸ்தமித்துக் கொட்டும் பணமழை.. கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் சனி பகவான் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று சனிபகவான் உதயமாகின்றார். சனி பகவானின் கிரக நிலையானது. அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சனிபகவானின் அஸ்தமனத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் சனி பகவானின் அஸ்தமனம் நல்ல முன்னேற்றத்தை பெற்றுக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சனி பகவான் வருகின்ற காரணத்தினால் நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிபெருமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தருமன எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பலன்களும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

சனி பகவானின் அஸ்தமனம் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழ்வு என்ற காரணத்தினால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி அடையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து முயற்சிகளும் அதிர்ஷ்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. சரியான திட்டங்கள் சரியான நேரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலையில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்ப ராசி

சனி பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை பெற்றுத் தரமான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலைமை உங்களுக்கு சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner