Lucky Rasis: தரித்திரத்தை அடித்து விரட்ட போகும் ராசிகள்.. பூரட்டாதியில் சனி புதன் சேர்க்கை.. 3 ராசிகள் பணமழை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky Rasis: தரித்திரத்தை அடித்து விரட்ட போகும் ராசிகள்.. பூரட்டாதியில் சனி புதன் சேர்க்கை.. 3 ராசிகள் பணமழை

Lucky Rasis: தரித்திரத்தை அடித்து விரட்ட போகும் ராசிகள்.. பூரட்டாதியில் சனி புதன் சேர்க்கை.. 3 ராசிகள் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 03, 2025 12:59 PM IST

Lucky Rasis: பூரட்டாதியில் புதன் சனி சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lucky Rasis: தரித்திரத்தை அடித்து விரட்ட போகும் ராசிகள்.. பூரட்டாதியில் சனி புதன் சேர்க்கை.. 3 ராசிகள் பணமழை
Lucky Rasis: தரித்திரத்தை அடித்து விரட்ட போகும் ராசிகள்.. பூரட்டாதியில் சனி புதன் சேர்க்கை.. 3 ராசிகள் பணமழை

இது போன்ற போட்டோக்கள்

அந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றன. அந்த வகையில் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று புதன் பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். ஏற்கனவே சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றார்.

இதன் காரணமாக தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். பூரட்டாதியில் புதன் சனி சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

புதன் சனி சேர்க்கை மூலம் உங்களுக்காக கிடைக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வழிகளில் வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது செலவுகள் குறையும் எனக் கூறப்படுகிறது. லாபகரமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

நேர்மறையான விளைவுகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும் என கூறப்படுகிறது. மனதில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு இது முக்கியமான காலகட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ரிஷப ராசி

பூரட்டாதியில் புதன் மற்றும் சனி சேர்க்கை உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதகமான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாக்கும் என கூறப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமான பலன்களை செய்வார்கள் என கூறப்படுகிறது. அனைத்து பொறுப்புகளையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

சனி மற்றும் புதன் சேர்ந்து அதிர்ஷ்ட பழங்களை கொடுக்கப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவர் உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கல்வித்துறைகள் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.