Rahu Sukra: அபூர்வ சேர்க்கை.. ராகு சுக்கிரன் மீன ராசியில் சேர்ந்து பணமழை.. இந்த ராசிகள் ஜாலியா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Sukra: அபூர்வ சேர்க்கை.. ராகு சுக்கிரன் மீன ராசியில் சேர்ந்து பணமழை.. இந்த ராசிகள் ஜாலியா?

Rahu Sukra: அபூர்வ சேர்க்கை.. ராகு சுக்கிரன் மீன ராசியில் சேர்ந்து பணமழை.. இந்த ராசிகள் ஜாலியா?

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2025 12:01 PM IST

Rahu Sukra: ராகு சுக்கிரன் சேர்க்கை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Rahu Sukra: அபூர்வ சேர்க்கை.. ராகு சுக்கிரன் மீன ராசியில் சேர்ந்து பணமழை.. இந்த ராசிகள் ஜாலியா?
Rahu Sukra: அபூர்வ சேர்க்கை.. ராகு சுக்கிரன் மீன ராசியில் சேர்ந்து பணமழை.. இந்த ராசிகள் ஜாலியா?

ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் ராகு பகவான் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த 2025 ஆம் ஆண்டு மத்திய கீழ் தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி இன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைந்தார். இதன் காரணமாக ராகு பகவான் மற்றும் சுக்கிரன் இருவரும் இணைந்துள்ளனர். ராகு சுக்கிரன் சேர்க்கை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

மகர ராசி

ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு குடும்பத்தோடு மகிழ்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு வணிகத்தில் நல்ல லாபத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆதாயங்களை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.

அரசியல் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேஷ ராசி

ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கையானது உங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கையில் உச்சகட்ட மகிழ்ச்சி கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் நலன் சார்ந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றத்தை பெறும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner