Moolam: மூல நட்சத்திரத்தில் ஏறிய புதன்.. சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்
மூல நட்சத்திரத்தில் புதன் பகவான் சஞ்சரிக்கத் தொடங்கியுள்ளார்.
மூல நட்சத்திரம் கேது கிரகத்தால் ஆட்சிசெய்யும் நிலையில் புதனின் சஞ்சாரத்தால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும். அத்தகைய மூன்று ராசிகள் குறித்துக் காணவேண்டும்.
மேஷம்: இந்த ராசியினருக்கு 9ஆம் வீட்டில் புதன் அமர்வதால் மகனுக்கும் தந்தைக்கும் இடையே சண்டை சச்சரவுகள் உண்டாகும். ஜாதக அமைப்பின்படி, சிலருக்கு ஜென்மத்தில் இருக்கும் புதன் சரிவர அமையாமல் போனால், நிலை கவலைக்குரியதாக மாறும். உங்களது செயல்பாடுகளில் கோபம் அதிகம் கொப்பளிக்கும். தங்கை, தம்பியுடன் வீணான சண்டைகளைப்போடுவீர்கள். பொறுமையாக இல்லையென்றால் கெட்டப்பெயர் உருவாவது உறுதி.
மிதுனம்: இந்த ராசியினருக்கு 7ஆம் வீட்டில் இருக்கிறார், புதன். மேலும் மூல நட்சத்திரத்தில் புதனின் சஞ்சாரம் காதலியுடன் சண்டையை வளர்க்கும். கணவன் - மனைவிக்கு இடையே உப்புச்சப்பு இல்லாத விஷயங்களுக்கு சண்டை வரும். சொந்தபந்தங்களுடன் கூட மிதுன ராசியினர், கவனமாகப் பேசவேண்டும். இல்லையென்றால், பஞ்சாயத்தாகிவிடும். வியாபாரிகள், பணியிடத்தில் பணிபுரிபவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படவில்லையென்றால் புதிய பூகம்பங்கள் வரலாம்.
கன்னி: இந்த ராசியினருக்கு, மூலநட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் புதனால், அம்மாவின் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். அம்மாவுடன் கருத்து வேறுபாடு அடையலாம். மேலும் கடனாளி ஆகும் வாய்ப்பும் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்