தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bad Luck : 2025 ல் கதறப்போகும் ராசிகள்.. நிதிச்சிக்கல் முதல் மனக்கலக்கம் வரை எந்த 5 ராசிகளுக்கு கஷ்டம் பாருங்க!

Bad Luck : 2025 ல் கதறப்போகும் ராசிகள்.. நிதிச்சிக்கல் முதல் மனக்கலக்கம் வரை எந்த 5 ராசிகளுக்கு கஷ்டம் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 04, 2024 02:15 PM IST

Bad Luck : புத்தாண்டில் தங்கள் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, சுகம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வரும் புத்தாண்டில் இந்த வருடத்தின் அனைத்து தொல்லைகளும் நீங்கி நல்ல நாட்கள் வரும் என்பது நம்பிக்கை பலருக்கும் இருக்கும். 2025-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும் என பாருங்கள்.

2025 ல் கதறப்போகும் ராசிகள்.. நிதிச்சிக்கல் முதல் மனக்கலக்கம் வரை எந்த 5 ராசிகளுக்கு கஷ்டம் பாருங்க!
2025 ல் கதறப்போகும் ராசிகள்.. நிதிச்சிக்கல் முதல் மனக்கலக்கம் வரை எந்த 5 ராசிகளுக்கு கஷ்டம் பாருங்க!

Bad Luck : ஒவ்வொருவரும் புத்தாண்டிலும் தங்கள் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, சுகம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வரும் புத்தாண்டில் இந்த வருடத்தின் அனைத்து தொல்லைகளும் நீங்கி நல்ல நாட்கள் வரும் என்பது நம்பிக்கை பலருக்கும் இருக்கும் கஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகள் காரணமாக, ஒரு நபர் பல நேரங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்.

இந்த நிலையல் 2024 ஆம் ஆண்டின் பாதி கடந்துவிட்டது. வரும் 2025ம் வருடத்தில் தங்கள் வாழ்க்கை மாறுமா என்று பல தரப்பினரும் காத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்குப் பிறகு 2025 வர உள்ளது. புத்தாண்டு தங்களுக்கு என்ன தரப்போகிறது என்று எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். புதிய ஆண்டில் வேலையில் முன்னேற்றம் இருக்குமா அல்லது செல்வம் குவியுமா என்று மக்கள் ஆரம்பத்திலேயே சிந்திக்கத் தொடங்குவார்கள். 2025-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுனம் 2025 ஆம் ஆண்டில் பல குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் சரியான பலன் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களிடம் ஈகோ அதிகரிக்கலாம். வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். பணப்பற்றாக்குறையால் வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் 2025ல் குடும்ப வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்ப மகிழ்ச்சி கணிசமாக குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் பல பிரச்சனைகள் வரலாம். உங்களின் வேலையில் சரியான பலன் கிடைக்காததால் மனம் கலங்குலாம். குடும்பத்தில் ஏற்படும் மோதல்கள் உறுப்பினர்களின் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பல அழுத்தங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர புரிதல் குறைய வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும்  உத்தியோகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் காலப்போக்கில் நிலைமை மாறலாம். பணத்தைப் பற்றி மனம் கவலைப்படும். மே 2025க்குப் பிறகு குடும்ப உறவுகள் மேம்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் 2025-ல் விரும்பத்தகாத சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். சிலர் குடும்ப பிரச்சனைகளில் பொறுமை இழக்க நேரிடும். ஆனால் வருட இறுதியில் குடும்பத்தில் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியாக இருக்கும். பொருளாதார நிலையும் படிப்படியாக மேம்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு 2025ல் மகிழ்ச்சி குறையும். வேலையில் வெற்றி பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இது உறவுகளில் தவறான புரிதலையும் அதிகரிக்கிறது. இந்த ஆண்டு, மீன ராசிக்காரர்களுக்கு பிறந்த நாளில் சனியின் தாக்கம் முதல் கட்டத்தில் தொடங்கும். இதன் முதல் நிலை பாதிப்பால் இரண்டரை ஆண்டுகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9