தமிழ் செய்திகள்  /  Astrology  /  Zodiac Signs That Will Reap Good Fortune Due To Ubayachari Yoga

Ubayachari Yoga: உண்டான உபயாச்சாரி யோகம்.. அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Feb 22, 2024 09:18 PM IST

புதிதாக உண்டாகும் உபயாச்சாரி யோகத்தால் நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

உபயாச்சாரி யோகத்தால் நன்மைபெறும் ராசிகள்
உபயாச்சாரி யோகத்தால் நன்மைபெறும் ராசிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

கும்பத்தில் சூரியபகவான் சஞ்சரிக்கத்தொடங்கியபின், ராகு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சூரியனுக்கு இரண்டு பக்கமும் அமைந்து, உபயாச்சாரி ராஜயோகத்தை உண்டாக்கியுள்ளது. இந்த உபயாச்சாரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மகரம்: இந்த ராசியினருக்கு உபயாச்சாரி ராஜயோகத்தால் புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரிகளாக இருந்தால், புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவர். தொழில் முனைவோருக்கு அயல்நாடுகளில் புதிய ஆர்டர்கள் உருவாகும். மிக மோசமான காலகட்டங்கள் எல்லாம் மறையும்.

துலாம்: இந்த ராசியினருக்கு உபயாச்சாரி ராஜயோகத்தால் வருவாய் பெருகும். வெகுநாட்களாக உங்கள் உழைப்புக்குக் கிடைக்காத அங்கீகாரம் கிடைத்தே தீரும். ஒப்பந்ததாரர்களுக்கு வெகுநாட்களாக கிடைக்காமல் இருந்த டெண்டர் கிடைக்கும்.

கும்பம்: இந்த ராசியினருக்கு உபயாச்சாரி ராஜயோகத்தால் கணவன் -மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளாக இருந்தால் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த தருணத்தில் இனிமையான பேச்சு, தன்னம்பிக்கையான செயல்பாடு,  பணியிடத்தில் சுறுசுறுப்பு ஆகியவை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்