Lord Chevvai: செவ்வாய் இந்த இந்த முறை தாக்குதல் செய்வாரா?.. இந்த ராசிகள் வாழ்க்கையில் என்ன நடக்கும்?
Lord Chevvai: செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். இதன் காரணமாக ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Chevvai: நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் செல்வம், தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் பகவான் 12 ராசிகளில் சுழற்சியை முடிப்பதற்கு 22 மாதங்கள் தோராயமாக எடுத்துக் கொள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். இதன் காரணமாக ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
செவ்வாய் பகவானின் பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்ட யோகங்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் கல்லூரியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கன்னி ராசி
செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் இன்பங்களை அள்ளிக் கொடுக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்திகளையும் என கூறப்படுகிறது.
மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக பணிகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதையை அதிகப்படுத்தி கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
உங்களுக்கு தனயோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
