Devshayani Ekadashi: வருகிறது தேவஷயனி ஏகாதசி.. ராக்கெட் வேகத்தில் சென்று வளரப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Devshayani Ekadashi: வருகிறது தேவஷயனி ஏகாதசி.. ராக்கெட் வேகத்தில் சென்று வளரப்போகும் ராசிகள்

Devshayani Ekadashi: வருகிறது தேவஷயனி ஏகாதசி.. ராக்கெட் வேகத்தில் சென்று வளரப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil Published Jul 15, 2024 04:23 PM IST
Marimuthu M HT Tamil
Published Jul 15, 2024 04:23 PM IST

Devshayani Ekadashi: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 17 ஜூலை 2024 அன்று, தேவஷயனி ஏகாதசியால் அதிஷ்டம்பெறப் போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Devshayani Ekadashi: வருகிறது தேவஷயனி ஏகாதசி.. ராக்கெட் வேகத்தில் சென்று வளரப்போகும் ராசிகள்
Devshayani Ekadashi: வருகிறது தேவஷயனி ஏகாதசி.. ராக்கெட் வேகத்தில் சென்று வளரப்போகும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

தேவஷயனி ஏகாதசியின் முக்கியத்துவம்:

ஆடி மாதத்தின் சுக்ல பட்சத்தின் ஏகாதசி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு, தேவஷயனி ஏகாதசி ஜூலை 17ஆம் தேதி மிகவும் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது. 

தேவஷயனி ஏகாதசி அன்று விஷ்ணு 4 மாதங்கள் தூக்கத்திற்கு செல்வதாக ஐதீகம். எனவே, இது தேவஷயனி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சடங்குகள் உள்ளிட்ட அனைத்து மங்களகரமான செயல்களும் இந்த மாதத்தில் தடைசெய்யப்படுகின்றன. 

இந்து நாட்காட்டியின் படி, தேவஷயனி ஏகாதசிக்கு 1 நாள் முன்பு சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும். புதன்-சுக்கிரன் அமர்ந்திருக்கும் இடத்தில் லட்சுமி நாராயணர் யோகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். 

அதே சமயம் கடகத்தில் சூரியனின் நுழைவு பல ராஜயோகங்களை உருவாக்கும். சூரியன்-புதன் சேர்க்கை புதாதித்ய ராஜ யோகத்தையும், சூரியன்-சுக்கிரன் சேர்க்கை சுக்ராதித்ய ராஜ யோகத்தையும் உருவாக்கும். 

தேவஷயனி ஏகாதசியில் கிரகங்களின் இந்த அற்புதமான கலவையானது சில ராசிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். ஒவ்வொரு செயலிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். தேவஷயனி ஏகாதசியில் இருந்து எந்த ராசிக்காரர்கள் வாழ்வில் ஏற்றத்தைப்பெறுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம். 

தேவஷயனி ஏகாதசியில் நன்மைபெறும் ராசிகள்:

மேஷம்: தேவசயனி ஏகாதசியன்று சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் நிறைய முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும். செல்வம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். வியாபார சூழ்நிலை வலுவாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண நிச்சயம் ஆகலாம். பாசிட்டிவ் எனர்ஜி வாழ்க்கையில் கடத்தப்படும். உங்களிடம் கடன்பெற்று திருப்பித் தராமல் இருக்கும் பணம் விரைவில் கையில் கிட்டும். சுகபோகங்களில் வாழ்வீர்கள்.

ரிஷபம்: தேவஷயனி ஏகாதசி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தின் தொடக்கத்தைத் தருகிறது. இந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நீங்கள் பொருளாதார ரீதியாக செல்வந்தராக இருப்பீர்கள். வேலையில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் தேவஷயனி ஏகாதசியில் இருந்து பெருமாளின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். பண வரவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் அதிகரிக்கும். உடல் சார்ந்த பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, கிட்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் முன்னேற வாய்ப்பு உருவாகும்.

கன்னி: தேவஷயனி ஏகாதசியில் கிரகங்களின் அரிய சேர்க்கை கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் வேலை தேடல் நல்லமுறையில் முடியும். நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் அபரிமிதமான வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பழைய முதலீடுகளால் அதிக லாபம் கிடைக்கும். நிதி விஷயங்களில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். ஆரோக்கியமும் மேம்படும். வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.