பணத்தால் வெற்றிகளைக் குறிக்கும் ராசிகள்.. ராகு பூரட்டாதியில் புகுந்தார்.. உங்க ராசி இதுல இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தால் வெற்றிகளைக் குறிக்கும் ராசிகள்.. ராகு பூரட்டாதியில் புகுந்தார்.. உங்க ராசி இதுல இருக்கா?

பணத்தால் வெற்றிகளைக் குறிக்கும் ராசிகள்.. ராகு பூரட்டாதியில் புகுந்தார்.. உங்க ராசி இதுல இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 26, 2025 03:01 PM IST

Lord Rahu: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் சில ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகு பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் ஒரு சிலர் ராசிகள் ராஜ பலன்களை அனுபவிக்கப் போகின்றனர்.

பணத்தால் வெற்றிகளைக் குறிக்கும் ராசிகள்.. ராகு பூரட்டாதியில் புகுந்தார்.. உங்க ராசி இதுல இருக்கா?
பணத்தால் வெற்றிகளைக் குறிக்கும் ராசிகள்.. ராகு பூரட்டாதியில் புகுந்தார்.. உங்க ராசி இதுல இருக்கா?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று ராகு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். பொதுவாக ராகு பகவானின் இடமாற்றம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறுவார்கள். ஆனால் இந்த ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் சில ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகு பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் ஒரு சிலர் ராசிகள் ராஜ பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

ராகு நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அடுத்த 18 மாதங்கள் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சீராகும் என கூறப்படுகிறது. ராகு மூன்றாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் நகர்ந்து செல்கின்றார். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும் எனக் கூறப்படுகிறது. புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

லாபகரமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் அமைதி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

ராகு பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரோடு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner