Tamil News  /  Astrology  /  Zodiac Signs That Will Get Luck By Children In 2024 Horoscope Astrology

Horoscope Luck: அட்ரா சக்க.. அட்ரா சக்க..ஜனவரி மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் இவைதான்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 03, 2024 08:30 PM IST

வருமானம் என்பது வரும் ஆனால் அந்த வருமானத்தை உங்களால் பிடித்து வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையானது உருவாகும். என்னதான் செலவு வந்தாலும், எந்த இடத்திலும் கடன் வாங்க மாட்டீர்கள். அவ்வளவு வருமானம் வரும்.

2024 -ல் பிள்ளைகளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?
2024 -ல் பிள்ளைகளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?

ட்ரெண்டிங் செய்திகள்

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தைகளால் வந்த வேதனைகள் நீங்கி, அவர்கள் நல்வழிப்பட்டு வாழ்க்கையை நோக்கி முன்னேறுவார்கள். அந்த முன்னேற்றம் உங்களுக்கு பெருமையை தேடித் தரும். 

கன்னி ராசியை பொறுத்த வரை அவர்களுக்கு இரண்டு கட்டாம் அமைப்பில் பலன்கள் அமைய இருக்கிறது. காரணம் ஆறாம் இடத்தில் சனி நல்ல நிலையில் இருக்கிறார். எட்டாம் இடத்தில் குரு மறைந்திருக்கிறார். ஏழாம் இடத்தில் ராசியோடு தொடர்பு கொண்ட ராகு கேதுகள் இருக்கின்றன. இப்படி இருந்தால் என்ன ஆகும் என்றால், விரயங்கள் இருக்கும். 

வருமானம் என்பது வரும் ஆனால் அந்த வருமானத்தை உங்களால் பிடித்து வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையானது உருவாகும். என்னதான் செலவு வந்தாலும், எந்த இடத்திலும் கடன் வாங்க மாட்டீர்கள். அவ்வளவு வருமானம் வரும். 

துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை அவர்களுக்கும் இந்த 2024 என்பது மிகச் சிறந்த வருடமாக இருக்கப்போகிறது. ஜனவரி மாத பலன்களும் அவ்வகையாகவே அமைந்திருக்கிறது. 

உங்கள் ராசிக்கு 3 கிரகங்கள் நன்மையைச் செய்யும். அவை சுக்கிரன்,சனி, புதன். அந்த மூன்று கிரகங்களுமே உங்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. சுக்கிரனும் புதனும் குருவின் பார்வையில் இருக்க, சனி ஐந்தாம் இடத்தில் வலுத்திருக்கிறார் இதனால் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்துமே முடிவுக்கு வந்து நல்ல காலம் பிறக்கும். 

விருச்சக ராசி காரர்களுக்கு இரண்டாம் இடமானது நன்றாக வலுத்து இருக்கிறது. ஜீவனாதிபதி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆகையால் ஆசிரியை பணியை செய்யக்கூடியவர்கள். வழக்கறிஞர் துறையைச் சார்ந்தவர்கள் என பேசி பிழைப்பு நடத்தக்கூடியவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களை கொடுக்கும். வாய்ச் சொல் பலிக்கும். பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசீர்வாதம் அளித்து, அதன் மூலமாக பலன்கள் கிடைக்கும்.  தன வரவு நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு திருமண உறுதி கிடைக்கும்.

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்