Shani Peyarchi Palangal: சனி சென்று குருவை பிடித்தார்.. மார்ச் முதல் பண மழை.. 3 ராசிகள்.. 2 அரை ஆண்டு விடமாட்டார்
Shani Peyarchi Palangal: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Shani Peyarchi Palangal: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான்ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றின்றார்.
நீதியின் கடவுளாக விளங்கக்கூடிய சனி பகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
சனி பகவானின் ராசி மாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அதிர்ஷ்டம் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
துலாம் ராசி
சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சனிப்பெயர்ச்சி மூலம் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செல்வத்தின் அதிகரிப்பு உங்களுக்கு இருக்கும். நல்ல செய்திகளை தேடிவரும். செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மகர ராசி
சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பணயோகத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப உறுப்பினர்களோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
