Bad Luck Rasis: விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கு.. செவ்வாய் 60 நாட்கள் வைத்து செய்யும் ராசிகள்.. தப்பிச்சுக்கோங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bad Luck Rasis: விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கு.. செவ்வாய் 60 நாட்கள் வைத்து செய்யும் ராசிகள்.. தப்பிச்சுக்கோங்க!

Bad Luck Rasis: விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கு.. செவ்வாய் 60 நாட்கள் வைத்து செய்யும் ராசிகள்.. தப்பிச்சுக்கோங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 15, 2025 09:30 AM IST

Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான விளைவுகளை கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Bad Luck Rasis: விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கு.. செவ்வாய் 60 நாட்கள் வைத்து செய்யும் ராசிகள்.. தப்பிச்சுக்கோங்க!
Bad Luck Rasis: விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கு.. செவ்வாய் 60 நாட்கள் வைத்து செய்யும் ராசிகள்.. தப்பிச்சுக்கோங்க!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 7ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். செவ்வாய் பகவானுக்கு கடக ராசி பலவீனமான ராசியாகும்.

செவ்வாய் பகவானின் கடக ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான விளைவுகளை கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

செவ்வாய் கடக ராசி பயணம் உங்களுக்கு சாதகம் மற்றும் சூழ்நிலையை உருவாக்கும் என கூறப்படுகிறது. சரும நோய் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது என கூறப்படுகிறது.

தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட உறவுகளில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

கடக ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு பல சிக்கல்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. சாலையில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமைதியாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் பல சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

செவ்வாய் கடக ராசி பயணம் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இரண்டு மாதங்கள் சிம்ம ராசிக்காரர்கள் பல விரும்பத்தகாத மாற்றங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. எதிர்பாராத திருப்பங்களை நீங்கள் சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை தனி கவனம் செலுத்தி காத்துக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner