Ketu Rasipalan: கேது பெயர்ச்சி மூலம் குடும்பத்தில் கொடி கட்டி பறக்கும் ராசிகள் நீங்கதானா?.. வாங்க பார்க்கலாம்!
Ketu Rasipalan: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Ketu Rasipalan: கேது பகவான் நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Feb 15, 2025 05:00 AMToday Rasipalan : 'நல்ல செய்தி தேடி வரும்.. தயக்கம் வேண்டாம்.. தைரியமா இருங்க' இன்றைய ராசிபலன் இதோ!
Feb 14, 2025 01:45 PMKumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
Feb 14, 2025 01:03 PMSun Transit : சனியின் வீட்டில் சூரியன்.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரப்போகிறது!
Feb 14, 2025 12:28 PMLove : சில ராசிக்காரர்கள் எளிதாக காதலில் விழுவார்களாம்.. அதுவும் இந்த நான்கு ராசிகள் எளிதில் காதல் வயப்படுவார்களாம்!
Feb 14, 2025 11:11 AMMoney Luck: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதியா?
Feb 14, 2025 10:18 AMLucky Zodiac : நான்கு கிரகங்களின் அற்புதமான சேர்க்கை.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்.. வாழ்க்கையில் மாற்றம் நிகழும்!
அந்த வகையில் ராகு கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும் என கூறப்படுகிறது. எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது.
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கேது பகவான் சிம்ம ராசிக்கு செல்கிறார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மிதுன ராசி
உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டிற்கு கேது பகவான் செல்லப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
துலாம் ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட காலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வங்கியில் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீன ராசி
கேது பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இதனால் உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நல்ல யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
