ராகு பெயர்ச்சி: கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி.. நல்ல மாற்றங்களைப் பெற்று வாழ்வில் ஜெயிக்கும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு பெயர்ச்சி: கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி.. நல்ல மாற்றங்களைப் பெற்று வாழ்வில் ஜெயிக்கும் ராசிகள்!

ராகு பெயர்ச்சி: கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி.. நல்ல மாற்றங்களைப் பெற்று வாழ்வில் ஜெயிக்கும் ராசிகள்!

Marimuthu M HT Tamil Published May 12, 2025 12:34 PM IST
Marimuthu M HT Tamil
Published May 12, 2025 12:34 PM IST

ராகு பெயர்ச்சி: மே மாதம் ராகு பகவான், கும்ப ராசியில் நுழைவார். கும்ப ராசியில் ராகு சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 ராகு பெயர்ச்சி: கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி.. நல்ல மாற்றங்களைப் பெற்று வாழ்வில் ஜெயிக்கும் ராசிகள்!
ராகு பெயர்ச்சி: கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி.. நல்ல மாற்றங்களைப் பெற்று வாழ்வில் ஜெயிக்கும் ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

ராகு பகவான் எப்போதும், எதிர் நிலையில் அதாவது பிற்போக்கு நிலையில் சஞ்சரிப்பார். இந்த நேரத்தில், ராகு பகவான், மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

வரக்கூடிய மே 18, 2025 அன்று, ராகு பகவான், கும்ப ராசியில் நுழைவார். கும்ப ராசியில் ராகு பகவானின், பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தையும் பாதிப்பினையும் உண்டு செய்யும்.

கும்ப ராசியில் ராகு பகவான், சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி கிடைக்கும்.

கும்ப ராசியில் ராகு பகவானின் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:

மேஷம் - ராகுவின் பெயர்ச்சியினால், மேஷ ராசிக்காரர்களுக்கு, லாப ஸ்தானத்தில் நல்ல பலன்கள் கிட்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். உங்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.

நிலம், கட்டடம், வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் விரிவாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு அதன், ஆறாவது வீட்டில் ராகுவின் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். நீங்கள் விரும்பும் எந்த முடிவையும் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.

மேலும் பழைய வருமான மூலங்களில் இருந்தும் பணம் வரும். தொழிலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். உங்கள் வேலையில் இருந்த தடைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். மதம் சார்ந்த காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

தனுசு:

ராகு பகவான், தனுசு ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ராகுவின் சஞ்சாரத்தின் தாக்கத்தால், உங்களுக்கு திடீர் நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். நிதி ஆதாயத்திற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும்.

நீங்கள் ஒரு பழைய நண்பரைச் சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக நிலைமை வலுவாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுடன் இருப்பார்கள். பண வரவு அதிகரிக்கும். அரசியல் ரீதியாக நன்மைகள் ஏற்படும். வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்படலாம்.

பொறுப்பு துறப்பு:-

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.