கடக ராசி: கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. ரத்தக்கண்ணீர் கொடுக்கும் செவ்வாய்.. சிக்கிய 3 ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கடக ராசி: கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. ரத்தக்கண்ணீர் கொடுக்கும் செவ்வாய்.. சிக்கிய 3 ராசிகள்!

கடக ராசி: கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. ரத்தக்கண்ணீர் கொடுக்கும் செவ்வாய்.. சிக்கிய 3 ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 11, 2025 06:50 PM IST

Mars Transit: செவ்வாய் பகவானின் கடக ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் சிக்கல்களை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி: கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. ரத்தக்கண்ணீர் கொடுக்கும் செவ்வாய்.. சிக்கிய 3 ராசிகள்!
கடக ராசி: கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. ரத்தக்கண்ணீர் கொடுக்கும் செவ்வாய்.. சிக்கிய 3 ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடக ராசிக்கு செல்கின்றார். வருகின்ற ஜூன் 7-ம் தேதி வரை இதே கடக ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்வார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் சிக்கல்களை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் கடக ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது என கூறப்படுகிறது.

தொழில் வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென கூறப்படுகிறது.

கடக ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு பாதகமான சில சம்பவங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.

வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சற்று சிக்கல்களோடு இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரம் மந்தமான சூழ்நிலையாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. விஷயங்களை ஆராயாமல் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது.

மற்றவர்கள் யாருக்கும் உத்தரவாதம் கொடுக்காமல் நீங்கள் இருப்பது நல்லது என கூறப்படுகிறது. வாழ்க்கையில் பல விரும்பத் தகாத விஷயங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. எதிர்பாராத திருப்பங்கள் உங்களுக்கு ஏற்படும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மந்தமான சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner