அடேங்கப்பா.. உருவானது நவபஞ்ச யோகம்.. குரு ராகு சேர்க்கையில் சிக்கிய ராசிகள்.. கொட்டும் பணமழை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அடேங்கப்பா.. உருவானது நவபஞ்ச யோகம்.. குரு ராகு சேர்க்கையில் சிக்கிய ராசிகள்.. கொட்டும் பணமழை!

அடேங்கப்பா.. உருவானது நவபஞ்ச யோகம்.. குரு ராகு சேர்க்கையில் சிக்கிய ராசிகள்.. கொட்டும் பணமழை!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 07, 2025 05:45 PM IST

குரு ராகு அம்சத்தின் மூலம் உருவாகும் நவபஞ்ச யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

அடேங்கப்பா.. உருவானது நவபஞ்ச யோகம்.. குரு ராகு சேர்க்கையில் சிக்கிய ராசிகள்.. கொட்டும் பணமழை!
அடேங்கப்பா.. உருவானது நவபஞ்ச யோகம்.. குரு ராகு சேர்க்கையில் சிக்கிய ராசிகள்.. கொட்டும் பணமழை!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

ராகு பகவான் மே 18ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கின்றார். குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். இவர்களின் நிலை பொறுத்து 500 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்ச யோகம் உருவாக உள்ளது. குரு ராகு அம்சத்தின் மூலம் உருவாகும் நவபஞ்ச யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

குரு ராகு உருவாக்கும் நவபஞ்ச யோகம் உங்களுக்கு திடீர் நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வியாபாரத்தில் திட்டி லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

குரு ராகு உருவாக்கும் நவபஞ்ச யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பப் போவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வெளிநாட்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மன அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னி ராசி

குரு ராகு உருவாக்கும் நவபஞ்ச யோகம் உங்களுக்கு வாழ்க்கையை செழிப்பாக மாற்றும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நீண்ட பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் எனக் கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.