Sun and Saturn: கும்பத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun And Saturn: கும்பத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

Sun and Saturn: கும்பத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Feb 03, 2025 09:33 PM IST

Sun and Saturn: கும்பத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Sun and Saturn: கும்பத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Sun and Saturn: கும்பத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவானும் சனி பகவானின் நிலைகள் பல்வேறு பயனைத் தருகின்றன. வரப்போகும் ஆண்டில், சில ராசிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வரும் பிப்ரவரி 12அன்று, சூரிய பகவான் கும்ப ராசியில் நுழைகிறார். சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை கும்ப ராசியில் ஏற்படுகிறது. இந்த சேர்க்கையின் விளைவு அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும் என்றாலும், சில ராசிக்காரர்கள் கூடுதலான பலன்களைப் பெறுகின்றனர்.

குறிப்பாக, சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஜோதிடத்தின் படி, கும்பத்தில் சனி பகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். அப்படி நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் ராசிகள் குறித்துக் காண்போம். 

சனி பகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கையால் நன்மை பெறும் ராசிகள்:

சிம்மம்: கும்ப ராசியில் சனி பகவான் மற்றும் சூரியனின் சேர்க்கை சிம்ம ராசியின் 7ஆவது வீட்டில் நடைபெறுகிறது. அந்த வகையில் சனி பகவான், சூரிய பகவானால், பிப்ரவரி மாதம் சிம்ம ராசியினருக்கு பூரண அருள் கிடைக்கும். இதனால், வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.

தனுசு:

தனுசு ராசியின் மூன்றாம் வீட்டில் சூரிய பகவான் மற்றும் சனி பகவான் ஒன்று சேருவார்கள். இந்நிலையில் இந்த தனுசு ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். அவர்கள் எதிலும் வெற்றி பெறுவார்கள். வளர்ச்சிக்குப் பல வாய்ப்புகள் அமையும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய வீடு வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் மற்றும் புதிய வருமான ஆதாரங்களுக்கு வழிவகுக்கும். வெகுநாட்களாக வாகனங்கள் இல்லாமல் இருப்பவர்கள், இவ்வேளையில் வாகனம் வாங்குவர்.

கன்னி: சனி பகவான் மற்றும் சூரிய பகவானின் சங்கமம் கன்னி ராசியில் இருந்து 6ஆவது வீட்டில் நடைபெறுகிறது. இதனால் இந்த கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் நல்ல வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். வாழ்க்கையில் இதுவரை இருந்த சிரமங்கள் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கன்னி ராசியினர், சூரிய பகவான் மற்றும் சனி பகவானின் சேர்க்கையால், விவசாயத்தோட்டங்கள் வாங்கி, நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்