Tamil New Year 2025: நாளை பிறக்குது விசுவாவசு.. பணமழை கொட்டும் தமிழ் புத்தாண்டு.. சூரியன் ராசிகள் இவங்கதான்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil New Year 2025: நாளை பிறக்குது விசுவாவசு.. பணமழை கொட்டும் தமிழ் புத்தாண்டு.. சூரியன் ராசிகள் இவங்கதான்?

Tamil New Year 2025: நாளை பிறக்குது விசுவாவசு.. பணமழை கொட்டும் தமிழ் புத்தாண்டு.. சூரியன் ராசிகள் இவங்கதான்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 13, 2025 12:00 PM IST

Tamil New Year 2025: சூரியன் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Tamil New Year 2025: நாளை பிறக்குது விசுவாவசு.. பணமழை கொட்டும் தமிழ் புத்தாண்டு.. சூரியன் ராசிகள் இவங்கதான்?
Tamil New Year 2025: நாளை பிறக்குது விசுவாவசு.. பணமழை கொட்டும் தமிழ் புத்தாண்டு.. சூரியன் ராசிகள் இவங்கதான்?

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் சூரிய பகவான் ஏப்ரல் 14ஆம் தேதி ஆன நாளை மேஷ ராசிக்கு செல்கின்றார். இதன் காரணமாக சித்திரை மாதம் பிறக்கின்றது. இது தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியன் மேஷ ராசியில் நுழையும் பொழுது தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூரியன் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. பணவரவு உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டிற்கு சூரியன் வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டிற்கு சூரியன் வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner