Sani Bad Luck: சனி அஸ்தமிக்கிறார்.. கவனத்தின் உச்சத்தில் இருக்க வேண்டிய ராசிகள்.. சிக்கிக்கொண்டவர்கள் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bad Luck: சனி அஸ்தமிக்கிறார்.. கவனத்தின் உச்சத்தில் இருக்க வேண்டிய ராசிகள்.. சிக்கிக்கொண்டவர்கள் யார்?

Sani Bad Luck: சனி அஸ்தமிக்கிறார்.. கவனத்தின் உச்சத்தில் இருக்க வேண்டிய ராசிகள்.. சிக்கிக்கொண்டவர்கள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 05, 2025 12:12 PM IST

Sani Bad Luck: கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் இந்த பிப்ரவரி மாத இறுதியில் அஸ்தமனம் ஆகின்றார். இது ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Sani Bad Luck: சனி அஸ்தமிக்கிறார்.. கவனத்தின் உச்சத்தில் இருக்க வேண்டிய ராசிகள்.. சிக்கிக்கொண்டவர்கள் யார்?
Sani Bad Luck: சனி அஸ்தமிக்கிறார்.. கவனத்தின் உச்சத்தில் இருக்க வேண்டிய ராசிகள்.. சிக்கிக்கொண்டவர்கள் யார்?

இது போன்ற போட்டோக்கள்

கர்ம வினைகளை சனி பகவான் திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார் இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றிக் கொண்டார்.

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் இந்த பிப்ரவரி மாத இறுதியில் அஸ்தமனம் ஆகின்றார். இது ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

மகர ராசி

சனி பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தேவையற்ற கோவங்களை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும் பொழுது பலமுறை சிந்திப்பது நல்லது என கூறப்படுகிறது. மற்றவர்கள் பேசும்போது நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது. 

திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் உங்களுக்கு அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு பல சிக்கல்களால் குறைந்து கொண்டே செல்லும் என கூறப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

சனி பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு மன அழுத்தத்தில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. பணவரவில் அவ்வப்போது குறைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை துணையோடு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட கூடும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் வருவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.

கடக ராசி

சனி பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு அசுப பலன்களை கொடுப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. நீங்கள் பேசினால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. மற்றவர்கள் பேசினால் நீங்கள் அமைதியாக செல்வது நல்லது என கூறப்படுகிறது. கோபத்தை தவிர்த்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner