Guru: கொட்டிக் கொடுக்க குரு.. குபேர யோகம் கிடைக்குமா?.. பணத்தை அள்ளும் ராசிகள்.. யார் அந்த ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: கொட்டிக் கொடுக்க குரு.. குபேர யோகம் கிடைக்குமா?.. பணத்தை அள்ளும் ராசிகள்.. யார் அந்த ராசி?

Guru: கொட்டிக் கொடுக்க குரு.. குபேர யோகம் கிடைக்குமா?.. பணத்தை அள்ளும் ராசிகள்.. யார் அந்த ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2025 04:08 PM IST

Guru: குரு பகவானின் மிதுன ராசி பயணம் இந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru: கொட்டிக் கொடுக்க குரு.. குபேர யோகம் கிடைக்குமா?.. பணத்தை அள்ளும் ராசிகள்.. யார் அந்த ராசி?
Guru: கொட்டிக் கொடுக்க குரு.. குபேர யோகம் கிடைக்குமா?.. பணத்தை அள்ளும் ராசிகள்.. யார் அந்த ராசி?

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் குருபகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்நிலையில் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் இந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

மேஷ ராசி

குருபகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு குபேர யோகம் கிடைக்கும் என கருதப்படுகிறது. நல்ல முன்னேற்றம் இருக்கும் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கக்கூடும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

தனுசு ராசி

குருபகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு பணக்கார யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

கும்ப ராசி

சனிபகவானின் சொந்தமான ராசிக்கான உங்களுக்கு குரு பகவான் நல்ல யோகத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்திற்கு எந்த குறையும் இருக்காது. வேலை தேடுபவர்களுக்கு தகுதி ஏற்ப நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.

பொருளாதார நிலையில் முன்பை விட நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner