சித்திரை ராசிகள்: தமிழ் புத்தாண்டு முதல் பணமழையில் குளிக்கும் 3 ராசிகள்.. மேஷத்தில் நுழையும் சூரியன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சித்திரை ராசிகள்: தமிழ் புத்தாண்டு முதல் பணமழையில் குளிக்கும் 3 ராசிகள்.. மேஷத்தில் நுழையும் சூரியன்!

சித்திரை ராசிகள்: தமிழ் புத்தாண்டு முதல் பணமழையில் குளிக்கும் 3 ராசிகள்.. மேஷத்தில் நுழையும் சூரியன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 05, 2025 05:46 PM IST

Zodiac signs: சூரியன் மேஷ ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சித்திரை ராசிகள்: தமிழ் புத்தாண்டு முதல் பணமழையில் குளிக்கும் 3 ராசிகள்.. மேஷத்தில் நுழையும் சூரியன்!
சித்திரை ராசிகள்: தமிழ் புத்தாண்டு முதல் பணமழையில் குளிக்கும் 3 ராசிகள்.. மேஷத்தில் நுழையும் சூரியன்!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். அன்றைய தினம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிறக்கின்றது. அது தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் சூரியன் மேஷ ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சூரிய பகவானின் மேஷ ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. நிதி சிக்கல்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நன்மைகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. வருமானத்திற்கான புதிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிர்பாராத லாபம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுசு ராசி

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிகம் முன்னேற்றத்தை பெற்று தரும் எனக் கூறப்படுகிறது. பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலைகளை முடிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரமுனை எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாழ்க்கை உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மகர ராசி

மேஷ ராசியில் சூரிய நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு அபரிதமான நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல கஷ்டங்கள் முடிவுக்கு வந்து உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.