புதனுதய யோகம்: கொஞ்சம் உஷாரா இருங்க.. பணமழை கொட்டும்.. அதிர்ஷ்ட ராசிகள்.. புதன் உதயம்!
புதனுதய யோகம்: புதன் பகவான் மீன ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது.

Lord Mercury: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன் பகவான். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் பேச்சு, திறமை, கல்வி, புத்திசாலித்தனம், வியாபாரம், படிப்பு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். கிரகங்களிலேயே புதன் பகவான் சந்திர பகவானுக்கு அடுத்தபடியாக மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
இந்நிலையில் புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். அதேசமயம் மார்ச் 17ஆம் தேதி அன்று அஸ்தமன நிலையில் புதன் பகவான் பயணித்து வருகின்றார். இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமாகின்றார்.
புதன் பகவான் மீன ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க| சனி ராகு மீனத்தில் சேர்க்கை.. கஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்
விருச்சிக ராசி
புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் உங்கள் ரசிகர்கள் ஐந்தாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி தேடி வரும் என்று கூறப்படுகிறது. புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்ப்பாராத நிதி ஆதாரங்களை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கும்ப ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. தொழில் சிக்கு கடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என கூறப்படுகிறது.
மிதுன ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
