Astrology: இளம் வயதிலேயே கோடீஸ்வரனாக மாறும் ராசிகள் இவர்கள்தானா?.. ஜோதிட சாஸ்திரத்தின் படி அதிர்ஷ்டமான ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrology: இளம் வயதிலேயே கோடீஸ்வரனாக மாறும் ராசிகள் இவர்கள்தானா?.. ஜோதிட சாஸ்திரத்தின் படி அதிர்ஷ்டமான ராசிகள் யார்?

Astrology: இளம் வயதிலேயே கோடீஸ்வரனாக மாறும் ராசிகள் இவர்கள்தானா?.. ஜோதிட சாஸ்திரத்தின் படி அதிர்ஷ்டமான ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2025 03:43 PM IST

Astrology: இந்த ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் அதிகாரத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதன் காரணமாக அவர்கள் உறவினர்களால் பலவீனப்படுத்தப்படுவார்கள். அந்த வகையில் இளம் வயதில் கோடீஸ்வரராக மாறக்கூடிய திறமை கொண்ட அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

Astrology: இளம் வயதிலேயே கோடீஸ்வரனாக மாறும் ராசிகள் இவர்கள்தானா?.. ஜோதிட சாஸ்திரத்தின் படி அதிர்ஷ்டமான ராசிகள் யார்?
Astrology: இளம் வயதிலேயே கோடீஸ்வரனாக மாறும் ராசிகள் இவர்கள்தானா?.. ஜோதிட சாஸ்திரத்தின் படி அதிர்ஷ்டமான ராசிகள் யார்?

இது போன்ற போட்டோக்கள்

அளவில்லாத செல்வம் வயது முதிர்ந்த காலத்தில் கிடைப்பது எந்த பயனையும் கொடுக்காது என கூறப்படுகிறது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் கணிப்பின்படி ஒரு சில ராசிக்காரர்கள் இளம் வயதிலேயே பணக்கார யோகத்தை பெறுவார்கள் என கூறுகின்றது.

கோடீஸ்வரர் அதிர்ஷ்டம் மட்டுமில்லாமல் அவர்களுடைய திறமையும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இளம் வயதிலேயே அதிர்ஷ்டத்தோடு சேர்ந்து திறமை அவர்களை கோடீஸ்வரராக மாற்றுகிறது. இந்த ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் அதிகாரத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதன் காரணமாக அவர்கள் உறவினர்களால் பலவீனப்படுத்தப்படுவார்கள். அந்த வகையில் இளம் வயதில் கோடீஸ்வரராக மாறக்கூடிய திறமை கொண்ட அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

மகர ராசி

இளம் வயதில் கோடீஸ்வரராக மாறக்கூடிய ராசிகளில் நீங்கள் முதல் இடத்தை வகித்து வருவதாக கூறப்படுகிறது. சனி பகவானால் ஆளப்படும் உங்களுக்கு தொடர்ச்சியான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நெறிமுறையோடு சிந்திக்க கூடிய வரைமுறை கொண்ட ராசியாக நீங்கள் திகழ்ந்து வருகின்றீர்கள்.

சிறப்பான திட்டமிடுதல் உங்களிடம் இருக்கும் பொறுமை மற்றும் மன உறுதி காரணமாக உங்களுக்கு இளம் வயதில் யோகம் பெறுகின்ற வாய்ப்பு கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. அசைக்க முடியாத லட்சிய உணர்வோடு பயணம் செய்யக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என கூறப்படுகிறது. சிக்கல்களை வழி நடத்துவதில் நீங்கள் எப்போதும் திறமை கொண்டவர்களாக இருப்பீர்கள் என கூறப்படுகிறது. அதனால் நீங்கள் கண்ட கனவு விரைவில் நனவாக மாறும் எனக் கூறப்படுகிறது.

ரிஷப ராசி

ஆடம்பரம் மற்றும் செல்வத்தின் அதிபதியாக திகழ்ந்துவரும் சுக்கிர பகவானால் ஆளப்படும் ராசியாக நீங்கள் திகழ்ந்து வருகின்றீர்கள். அதன் காரணமாக இயற்கையாகவே உங்களுக்கு செல்வத்தோடு தொடர்பு இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அத்தான் நினைத்ததை சாதிக்கக்கூடிய மன தைரியம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுமை மற்றும் முறையான அணுகுமுறை மூலம் நீங்கள் பணத்தை விரைவில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உருவாகும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உழைப்பின் பலனை நம்பி இளம் வயதிலேயே கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய ராசிகளாக நீங்கள் இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல அதனை ஆடம்பரமாக செலவு செய்வதில் தயங்க மாட்டீர்கள் எனவும் கூறப்படுகிறது.

விருச்சிக ராசி

இயல்பிலேயே அதிக சக்தி வாய்ந்த உள்ளுணர்வு கொண்ட ராசியாக நீங்கள் திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் அதிக கவனம் கொண்டு செயல்பட கூடிய ராசியாக நீங்கள் திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தான் எடுத்துக் கொண்ட கனவு எப்படியும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற மன உறுதி கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என கூறப்படுகிறது.

முதலீடுகள் மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் அனைத்தும் அனைத்து செயல்களிலும் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் நீங்கள் ஒரு திட்டத்தை சாதாரணமாக செயல்படுத்தி அதன் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய யோகக்காரர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே கோடீஸ்வரராக மாறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner