ராகு: குரு நட்சத்திரத்தில் நுழையும் ராகு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் ஒளி வந்து விட்டதா?.. என்னென்ன பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு: குரு நட்சத்திரத்தில் நுழையும் ராகு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் ஒளி வந்து விட்டதா?.. என்னென்ன பலன்கள்!

ராகு: குரு நட்சத்திரத்தில் நுழையும் ராகு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் ஒளி வந்து விட்டதா?.. என்னென்ன பலன்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 26, 2025 11:44 AM IST

Rahu: ராகு நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

ராகு: குரு நட்சத்திரத்தில் நுழையும் ராகு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் ஒளி வந்து விட்டதா?.. என்னென்ன பலன்கள்!
ராகு: குரு நட்சத்திரத்தில் நுழையும் ராகு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் ஒளி வந்து விட்டதா?.. என்னென்ன பலன்கள்!

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் ராகு பகவான் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி அன்று மீன ராசியில் இருக்கக்கூடிய குரு பகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். ராகு நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

ரிஷப ராசி

ராகு பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. வருமானத்தில் உங்களுக்கு உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாள் ஆசைகள் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. மன அமைதி உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பல்வேறு விதமான சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மிதுன ராசி

ராகு பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என கூறப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு உங்களுக்கு ஏற்ற அங்கீகாரத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீன ராசி

பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் ராகு பகவானால் உங்களுக்கு பல இடங்களில் நன்மை பயக்கக்கூடிய விஷயங்கள் நடக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்திசாலித்தனமான செயல்பாடுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது. செலவுகள் உங்களுக்கு குறைந்து வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.