மிதுனத்தில் வக்ரத்தில் பெயரும் செவ்வாய்.. லக் மேல் லக் வந்து டாப் கியரில் பறக்கப்போகும் ராசிகள்
மிதுனத்தில் வக்ரத்தில் பெயரும் செவ்வாய்.. லக் மேல் லக் வந்து டாப் கியரில் பறக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
நவகிரகங்களில் செவ்வாய் பகவான், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, 12 ராசிகளையும் சுற்றி வர 22 மாதங்கள் ஆகின்றன. செவ்வாய் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆக 45 நாட்கள் ஆகும்.
ஜோதிடத்தில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு ஒரு கிரகம் பெயர்ச்சி அடைவது என்பது இயல்பானது தான்.
அதன்படி, வரக்கூடிய ஜனவரி 21ஆம் தேதி செவ்வாய் பகவான், மிதுன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
பொதுவாக செவ்வாய் பகவான் ஒருவரின் தைரியத்துக்கு அதிபதி. செவ்வாய் பகவான் அதிகாரம், வைத்தியம், சிவப்பு நிறம் ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார்.
இந்த செவ்வாய்யின் வீடு மாற்றத்தால், அடுத்த மூன்று ராசிகளுக்கு 45 நாட்களுக்கு அற்புதமான முறையில் வாழ்வியலில் மாற்றம் ஏற்படும்.
இந்த காலத்தில் செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:
மிதுனம்: மிதுன ராசியில் வக்ர நிலையில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆவதால், கூடுதலான நன்மை இந்த ராசியினருக்குக் கிடைக்கிறது. இந்த காலத்தில் பயம் விலகி தைரியமும் புது தன்னம்பிக்கையும் பிறக்கும். வெகுநாட்களாக ஒரு புதுவேலையைத் தொடங்க ஆசைப்பட்ட நபர்களுக்கு வேலை நல்ல முறையில் நடக்கும். வெகுநாட்களாக முடிவடையாமல் இருந்த பணிகள் முடிவடையும். குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரித்து, பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உங்கள் ரத்த சொந்தத்தில் உதவிகள் மிதுன ராசியினருக்கு அதிகரிக்கும்.
கன்னி:
செவ்வாய் பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு இருந்த இறுக்கமான மனநிலை மாறும். சற்று ரிலாக்ஸாகி, உங்கள் தேவை என்ன என்ற தெளிவு பிறக்கும். இந்த காலத்தில் உங்கள் வீட்டில் வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். இறைவன் மீதான நாட்டம் அதிகரிக்கும். கடவுள் நம்பிக்கை கூடும். இறை வழிபாடு நடத்த வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வீர்கள். இல்லாதவர்களுக்கு உதவுவீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சித்து, இக்காலத்தில் கடுமையாக செயலாற்றினால், பெரிய வெற்றியைப் பெறலாம். வாகனங்கள் இல்லாதவருக்கு வாகனம் வாங்கும் சூழல் வாய்க்கும்.
விருச்சிகம்:
மிதுன ராசியில் வக்ர நிலையில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகும்போது, விருச்சிக ராசியினருக்கு பாக்ய யோகம் உண்டாகும். இதனால் தந்தை வழியில் இருந்து சில ஆதாயம் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும். உங்களது தொழில்களில் இருந்த மந்தத் தன்மை நீங்கி, நல்ல வாடிக்கையாளர்கள் மூலம் கணிசமான லாபத்தை ஈட்டலாம். பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் மெல்ல மெல்ல விலகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பெரிய பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். பொதுவெளியில் விருச்சிக ராசியினருக்குண்டான அங்கீகாரம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் கோபம் அதிகம்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்