Maga Nakshatra: மக நட்சத்திரத்தில் மண்டகப்படி போடும் சூரியன்.. மஜாவாக தேன் அடையை ருசிக்கும் ராசிகள்
Maga Nakshatra: மக நட்சத்திரத்தில் மண்டகப்படி போடும் சூரியன்.. மஜாவாக தேன் அடையை ருசிக்கும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Sun In Maha Nakshatra: வேத ஜோதிடத்தில் சூரிய பகவான், நவகிரகங்களின் அரசனாக இருக்கிறார். சூரியனின் பெயர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறது.
சூரிய பகவானின் நட்சத்திரப்பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மக நட்சத்திரத்தில் சூரியனின் பெயர்ச்சி:
சூரியன் 14 நாட்களுக்குப் பிறகு அதன் நட்சத்திர நிலையை மாற்றுகிறது. சூரியனின் பெயர்ச்சி போலவே, சூரியனின் நட்சத்திரத்தின் நிலை மாற்றமும் ஜோதிடத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும்.
சூரியக்கடவுள், பஞ்சாங்கத்தின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, அன்று இரவு 7:53 மணிக்கு மக நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார்.
27 நட்சத்திரங்களின் பட்டியலில் மக நட்சத்திரம் பத்தாம் இடத்தில் உள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். மக நட்சத்திரம் அங்கம் வகிக்கும் ராசி, சிம்மம். இதன் காரணமாக, சூரிய பகவான், மக நட்சத்திரத்தில் சஞ்சரித்தால், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.
அப்படி அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
மக நட்சத்திரத்தில் சூரிய பகவான் பெயர்ச்சி ஆவதால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:
மிதுனம்:
மக நட்சத்திரத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம், மிதுன ராசியினருக்குச் சாதகமான பலன்களைத் தருகிறது.
சூரிய பகவான், ஜோதிடத்தில் சக்தியைத் தரக்கூடியவராகப் பார்க்கக் கூடியவர். அதனால், இந்தப் பெயர்ச்சியால் மிதுன ராசியினர், சாதகமான விளைவுகளைப்பெறுகிறார்கள்.
அரசுப்போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு, இந்தக் காலகட்டம் அவர்களின் வாழ்வில் சாதகமான பலன்களைத் தரும்.
தொழில் துறையில், மிதுன ராசியினர் முன்னேற்றம் அடைவார்கள். மிதுன ராசிக்காரர்களின் நிதி வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் மிதுன ராசியினரின் நிதி நிலை வலுவடைகிறது. மேலும், மிதுன ராசிக்காரர்கள், குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த சூழ்நிலையில், சமூகத்தில் மிதுன ராசியினரின் மரியாதை உயரும். சொந்த வாழ்வில் பலகட்டங்களில் வெற்றிபெறுவார்கள். மிதுன ராசியினர், புதிய வேலை வாய்ப்புகளைப்பெற முடியும் மற்றும் அவர்களின் வணிகங்களில் பெரும் வணிக நன்மைகளைப் பெற முடியும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு மக நட்சத்திரத்தில் சூரியப்பெயர்ச்சி பலனளிக்கும். தற்போது சூரியன் இந்த ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக, கடக ராசிக்காரர்கள் முறையான முதலீடுகள் மூலம் பெரும் லாபத்தைப் பெறுவார்கள். மேலும், மூதாதையர் சொத்துக்களிலிருந்து வருவாய் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. சூரியப்பெயர்ச்சியால், கடக ராசியினர், தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்
கடக ராசியினருக்கு தந்தையின் ஆதரவைப் பெறலாம். அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கடக ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக உள்ளது மற்றும் அவர்கள் இந்த காலகட்டத்தில் முதலீடுகளை திட்டமிடலாம். அவர்கள் தங்கள் துணையுடன் தரமான நேரத்தையும் செலவிட முடியும்.
விருச்சிகம்:
மக நட்சத்திரத்தில் சூரிய பகவானின் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இந்த காலகட்டத்தில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். சூரிய பகவானின் நட்சத்திர மாற்றத்தால் விருச்சிக ராசியினருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்புள்ளது. அயல்நாட்டிலும் படிக்கும் வாய்ப்புள்ளது. சூரிய பகவானின் ஆசீர்வாதத்தால், தொழில் வாழ்வு சாதகமாகிறது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெரியபொறுப்புகள் உங்கள் வசமாகும். மறக்கமுடியாத நேரத்தைச் செலவிட முடியும். இந்த கட்டத்தில், உங்கள் குடும்பப்பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்