தமிழ் செய்திகள்  /  Astrology  /  Zodiac Signs Reaping Good Fortune Due To Lord Surya Rising To Aries

Aries: மேஷ ராசிக்குக் கிளம்பும் சூரிய பகவான்.. அதிர்ஷ்டத்தை அறுவடைசெய்யும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 28, 2024 10:01 AM IST

ஒன்பது கிரகங்களின் அதிபதியாக விளங்குபவர், சூரிய பகவான். இவர் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியன் ஒரு ஜாதகதாரரிடம் வலுவாக இருந்தால் வாழ்வில் மனநிம்மதி, ஆரோக்கியம் கிடைக்கும்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்: இந்த ராசியில் சூரிய பகவான், லக்னத்தில் நுழைகிறார். இக்காலகட்டத்தில் குரு பகவானும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் செல்வ வளம், இன்ப மயம் குடும்பத்தில் பெருகும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

ரிஷபம்: இந்த ராசியில் 11ஆம் இல்லத்தில் சூரிய பகவான் புலம்பெயர்கிறார். இதனால் வருவாய், நற்பெயர் கிடைக்கும். இக்கால கட்டத்தில் புதிய தொழில் தொடங்கலாம். தொடங்கினால் நல்ல லாபம் பெறுவீர்கள். முன்னரே முதலீடு செய்திருந்தால் அதிலிருந்தும் வருவாய் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சி அலைமோதும். உங்களுடைய பேச்சினால் புகழ்பெறுவீர்கள்.

விருச்சிகம்: சூரியன் விருச்சிக ராசியில் ஆறாம் வீட்டில் குடி புகுகிறார். இக்காலகட்டத்தில் நோய்களில் இருந்து சிகிச்சை கிடைக்கும்.

உங்கள் பணியிடத்தில் போதுமான ஆதரவு கிடைக்கும். இக்கால கட்டத்தில் வேறுவேலைக்கு முயற்சித்தாலும் நல்ல வேலை கிடைக்கும். ஈகோ பார்க்காமல் இறங்கிப்போய், குடும்பத்துடன் அனுசரித்துச் சென்றால் நன்மை கிடைக்கும். இதனால் நிரந்தர மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்