விசாக நட்சத்திரத்தில் பெயர்ந்த சுக்கிரன்.. சுபச்செய்தியைப் பெறப்போகும் மூன்று ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  விசாக நட்சத்திரத்தில் பெயர்ந்த சுக்கிரன்.. சுபச்செய்தியைப் பெறப்போகும் மூன்று ராசிகள்

விசாக நட்சத்திரத்தில் பெயர்ந்த சுக்கிரன்.. சுபச்செய்தியைப் பெறப்போகும் மூன்று ராசிகள்

Marimuthu M HT Tamil Published Oct 11, 2024 10:12 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 11, 2024 10:12 PM IST

Sukran Transit: விசாக நட்சத்திரத்தில் பெயர்ந்த சுக்கிரன்.. சுபச்செய்தியைப் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்துக் காண்போம்.

விசாக நட்சத்திரத்தில் பெயர்ந்த சுக்கிரன்.. சுபச்செய்தியைப் பெறப்போகும் மூன்று ராசிகள்
விசாக நட்சத்திரத்தில் பெயர்ந்த சுக்கிரன்.. சுபச்செய்தியைப் பெறப்போகும் மூன்று ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது போல், நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. இதனால் அதன் தாக்கம் சில ராசியினருக்கு நன்மையையும் பலருக்கு கெடுதலையும் தருகின்றன.

அதன்படி, அசுரர்களின் குருவவான சுக்கிர பகவான் எழில், நவீனம், சினேகம், வளம் ஆகியவற்றைத் தரும் எனக் கருதப்படுகிறது. மேலும், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி சுக்கிர பகவான், விசாக நட்சத்திரத்திற்குச் செல்கிறது. குருவின் நட்சத்திரப்பெயர்ச்சியினால் சில ராசியினர் நன்மைகளைப் பெறுகின்றனர்.

அப்படி சுக்கிரனின் நட்சத்திரப்பெயர்ச்சியால் செல்வச்செழிப்பினைப் பெற்று அதிர்ஷ்டம்பெறும் மூன்று ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

துலாம்:

சுக்கிரன் விசாக நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி ஆவதால் துலாம் ராசியினருக்கு ஆதரவான வாய்ப்புகள் ஏராளமாக உண்டாகும். துலாம் ராசியினருக்கு தலைமைப் பண்பு கூடும். திருமணம் ஆன கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் எல்லாம் மெல்ல மெல்ல விலகும். நண்பர்கள் மூலம் கணவன் - மனைவி இடையே சமரசம் உண்டாகும். நண்பர்கள் இணைந்து தொழில் செய்தால் நல்ல வரவு நம் கை வசம் கிடைப்பது உறுதி. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த வந்த சுணக்கத்தன்மை குறையும். வெகுநாட்ளாக முடியாமல் இருந்த பணிகள் இந்த காலத்தில் முயற்சித்தால் முடிந்தே தீரும்.

மகரம்:

சுக்கிரன் விசாக நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி ஆவதால், மகர ராசியினர் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் சகப் பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களது உழைப்பு அங்கீகரிக்கப்படும். இதனால், உங்களுக்கு ஊக்கத்தொகை விரைவில் கை வசம் வந்து சேரும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மகர ராசியினருக்கும், சரியான நிறுவனம் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கும் மகர ராசியினருக்கு, பெரிய புளிய கொம்பு போன்ற நிறுவனம் மூலம் பணியமர்த்தப்படுவீர்கள். தொழிலில் ஏராளமான போட்டிகள் மூலம் சிக்கலைச் சந்தித்து வரும் மகர ராசியினர், இந்த காலத்தில் சரியான தொழில் திட்டத்தை வகுத்தால் லாபத்தைப் பெறுவது உறுதி. மேலும் வெகுநாட்களாக வாங்க நினைத்தப் பொருட்களை வாங்கிவிடுவீர்கள். பூர்வீக ஊரில் இருக்கும் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி:

சுக்கிரன் விசாக நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி ஆவதால், கன்னி ராசியினருக்கு நன்மையே உண்டாகிறது. உங்களிடம் ஒரு பணியை வாங்கி விட்டு, உங்களுக்குப் போடாமல் இருந்த பில் தொகையை இந்த காலத்தில் கன்னி ராசியினர் பெற்றுவிடுவீர்கள். உங்களின் பேச்சு மற்றவர்களை நயம்பட கேட்கவைக்கும். உங்களது காதல் கை கூடும். எந்த ஒரு முயற்சி எடுத்தாலும், தெளிவாகத் திட்டமிட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!