Lord Mercury: சிம்மத்தில் ஏறிய புதன் பகவான்.. குதித்து குதித்து ஆடி ஆடி அதிர்ஷ்டம்பெறும் 3 ராசிகள்
Lord Mercury: சிம்மத்தில் ஏறிய புதன் பகவான்.. குதித்து குதித்து ஆடி ஆடி அதிர்ஷ்டம்பெறும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Mercury : நவக்கிரகங்களில் புதன் பகவான் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். புதன் சுபநிலையில் இருக்கும்போது, ஒரு நபருக்கு சுப பலன்கள் கிடைக்கும். வரும் செப்டம்பர்4ஆம் தேதி,புதன் பகவான் கடகராசியில் இருந்து சிம்ம ராசியில் நுழைகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 22, 2025 11:15 AMZodiac Signs: இந்த ராசிகள் வாழ்க்கை தலைகீழ் மாற்றம்.. குரு நட்சத்திர இடமாற்றத்தால் உருவான யோகம்.. என்ன நடக்கப்போகுது?
Mar 22, 2025 09:58 AMசூரிய கிரகணம் 2025: இந்த ராசிகள் வாழ்க்கை எப்படி மாறும்?.. சனி சூரிய கிரகணத்தன்று மாறுகிறார்.. என்ன நடக்கப்போகுதோ?
Mar 22, 2025 09:44 AMமே மாதம் கேது பெயர்ச்சி.. வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
Mar 22, 2025 07:54 AMபிறவியிலேயே லட்சுமி தேவியின் அருள் பெற்ற 5 ராசிகள் இதோ.. செல்வம், புகழ் குவியும் அந்த ராசிக்காரரா நீங்கள்!
Mar 22, 2025 07:00 AMGuru Transit 2025: குரு பெயர்ச்சி 2025 இல் ஜாக்பாட்.. இந்த ராசிகள் தலையெழுத்து மாறப்போக்து.. மே மாதம் குறி..!
Mar 22, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : கவலை வேண்டாம்.. கனவு நனவாகும் அதிர்ஷ்டம் யாருக்கு..இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
பாவத்தில் புதன் பகவான் நுழைவதால், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் பிறக்கும். ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புதன் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், கணிதம் மற்றும் நட்பு ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார். சிம்ம ராசியில் புதன் நுழைவதால் எந்த ராசிக்காரர்கள் பிரகாசிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி ஆவதால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:
மேஷம் -
வரும் செப்டம்பர் 4ஆம் தேதி, புதன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குச் செல்வதால், மேஷ ராசியினருக்கு சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும். தாயிடம் இருந்து செல்வத்தைப் பெறலாம். கலை மற்றும் இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப் பகுதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.
பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகஸ்தர்களுக்கு சகப்பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணி நிமித்தமாகப் பல்வேறுப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வீர்கள்.
மிதுனம் -
வரும் செப்டம்பர் 4ஆம் தேதி, புதன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குச் செல்வதால், மிதுன ராசியினருக்கு மகிழ்ச்சிஅதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். ஆடை போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். வாசிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விப் பணிகளில் மகிழ்ச்சி தரும் பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் கூடும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆலயத்தில் இறைதொண்டு பணிகள் செய்வீர்கள். புண்ணிய பயணம் செல்லும் வாய்ப்புகளும் உண்டு. நிறைய பேர் பசியைப் போக்குவீர்கள். உங்களது கோபம் குணம் குறையும். நிதானம் பெருகும். உங்களது கோபத்தால் விலகிப்போனவர்கள் மீண்டும் சேர்வார்கள்.
சிம்மம் -
வரும் செப்டம்பர் 4ஆம் தேதி, புதன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குச் செல்வதால், சிம்ம ராசியினருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில்உற்சாகம் கூடும். தொழில் புரியும் இடங்களில் தொழிலை விரிவுசெய்வீர்கள். இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பணியில் இருப்பவர்களுக்கு சகப்பணியாளர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். பணியில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். இடமாற்றமும் உண்டாகும். உங்களைப் பிடிக்காதவர்களுக்குக் கூட உங்களைப் பிடிக்க ஆரம்பிக்கும். இல்லறத்துணையுடன் இருந்த பிணக்குகள் தீரும். இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்