கடகத்தில் ஏறும் செவ்வாய்.. நீச நிலையில் நீந்தி பணப்பெட்டியை தூக்கி நிறுத்தும் ராசிகள்
கடகத்தில் ஏறும் செவ்வாய்.. நீச நிலையில் நீந்தி பணப்பெட்டியை தூக்கி நிறுத்தும் ராசிகள் குறித்துக் காண்போம்.
செவ்வாய் பகவான் வரக்கூடிய அக்டோபர் 20ஆம் தேதியன்று மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் புலப்பெயர்ச்சி அடைகிறார். ஒருவருக்கு தைரியம், கம்பீரம், மனத்திட்பம் ஆகியவற்றை செய்து முடிக்கக்கூடிய திறனை தருபவர், செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் ஒருவருக்கு தன் பலத்தை இழந்து நீச கதி அடைந்து கடக ராசியினருக்கு பலனைத் தருகிறார். இதனால் யாருக்கு எல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
நவ கிரகங்கள் ஒரு ராசியில் இருக்கும்போது உச்ச நிலை, பகை நிலை, நட்பு நிலை, ஆட்சி நிலை, மூல திரிகோண நிலை, சம நிலை,நீச நிலை என பல நிலைகளில் இருப்பார்.
அப்படி செவ்வாய் பகவான் வரக்கூடிய அக்டோபர் 20ஆம் தேதி கடக ராசியில் நீச நிலை அடையவுள்ளார். செவ்வாய் பகவானின் அமைப்பினால் அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
செவ்வாயின் அமைப்பினால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:
ரிஷபம்: ரிஷப ராசிக்கு மூன்றாம் இல்லத்தில் அதாவது கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. இதனால் ரிஷப ராசிக்கு தொழிலில் உச்சகட்ட காலம் ஆகும். இந்த காலத்தில் ஒருவர் நினைத்ததை அடைந்தே தீருவர். புதிய வேலைகள் கிடைத்து பழைய சம்பளத்தை விட அதிக சம்பளத்தைப் பெறுவீர்கள். நல்வாய்ப்புகள் உங்கள் வசம் வந்து சேரும். கிடைக்காமல் வெகுநாட்களாக இருந்த வாய்ப்புகள் கிடைக்கும். பிரச்னைகள் முடிந்தே தீரும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியால் வருவாய் அதிகரிக்கும். பணம் ஈட்டுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகி அதன்மூலம் பணத்தை ஈட்டுவீர்கள். உங்கள் பணியில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெல்வீர்கள். பணியிடத்தில் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பீர்கள். பொறுமையாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சியில், செவ்வாய் நீசம் அடைவதாலும் சூரிய பகவான் கேந்திர ஸ்தானத்தில் அமைவதாலும் பணியிட அமைப்பில் முன்னேற்றம் கூடும். பணியிடத்திலும் குடும்ப வாழ்விலும் அடுத்தகட்டத்திற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. இனிமையான பேச்சினால் சுபமான வெற்றியைப் பெறுவீர்கள். காதலில் ஜெயிப்பவர்களுக்கு இந்த காலம் சரியான காலம் ஆகும்.
துலாம்:
கடக ராசியில் செவ்வாய் நீசம் அடைவதால் துலாம் ராசியினருக்கு வெகுநாட்களாக செல்ல இருந்த இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வீர்கள். வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் வருவாயை அதிகரிப்பீர்கள். கணவன் - மனைவி பிரச்னைகள் சரியாகும்.
விருச்சிகம்:
கடக ராசியில் செவ்வாய் நீசம் அடைவதால் விருச்சிக ராசியினருக்கு உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு நல்ல இடத்தில் கிடைக்கும். இத்தனை நாட்களாக தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல் இருந்த விருச்சிக ராசியினருக்கு தந்தையின் அரவணைப்புக் கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். பொதுசேவைகளில் ஈடுபடுவீர்கள். திருமண வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களில் சுமுகப்பேச்சுவார்த்தையை முன்னெடுப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்