தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury Transit: மகர ராசியில் சஞ்சரிக்கும் புதன்.. ஜாக்பாட் பெறும் ராசிகள்

Mercury Transit: மகர ராசியில் சஞ்சரிக்கும் புதன்.. ஜாக்பாட் பெறும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Feb 01, 2024 09:11 AM IST

மகர ராசியில் புதாத்திய ராஜயோகம் உண்டாவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

புதன்.
புதன்.

இதனால் 5 ராசிகள் முன்னேற்றமான சூழலுக்குச் செல்கின்றன. அவை எந்த ராசிகள் என்பது குறித்துப் பார்ப்போம்.

மேஷம்: இந்த ராசியினருக்கு 10ஆம் வீட்டில் புதன் பெயர்ச்சியாகிறது. வெகுநாட்களாக முயன்று தோற்றுப்போன விஷயங்கள் கைகூடும். பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆதரவான சூழல் உருவாகும். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள்.

ரிஷபம்: இந்த ராசியினருக்கு பாக்ய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் நற்பலன்கள் கிடைக்கும். வெகுநாட்களாகப் பணம் இல்லாமல் தவித்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் தொழில் செய்யவே வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. முடிவுகள் எடுப்பதில் கில்லியாக மாறுவீர்கள்.

கன்னி: இந்த ராசியினருக்கு பூர்வ புண்ணியஸ்தானத்தில் புதனின் பெயர்ச்சி நிகழ்வதால் தொழிலில் வாய்ப்புகள் உருவாகும். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிசெய்வது பணியிடத்திலும் தொழில் செய்யுமிடத்திலும் லாபத்தை உண்டாக்கும்.

துலாம்: புதனின் பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு வெகுநாட்களாக இருந்த உடல்நலப் பாதிப்பு மறையும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இக்கால கட்டத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தங்கு தடை இல்லாமல் நடைபெறும்.

மகரம்: இந்த ராசியினருக்கு புதாத்திய ராஜயோகத்தால் காதலில் வெல்லும் வாய்ப்பு உண்டாகும். கோபத்தை மட்டும் கட்டுப்படுத்தினால் லாபத்தைப் பெறலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும் 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்