தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Zodiac Sign Sex Luck: ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’.. செவ்வாய் சுக்கிரன் இணைவு; அற்ப காம ராசிகள் யார் யார் தெரியுமா?

Zodiac Sign Sex Luck: ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’.. செவ்வாய் சுக்கிரன் இணைவு; அற்ப காம ராசிகள் யார் யார் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
May 05, 2024 05:41 PM IST

அதில், செவ்வாய் இணையும் பொழுது, அது அதிதீவிரமாக மாறும். காரணம், செவ்வாய் என்பது வேகம் மற்றும் கோபம் கொண்ட கோள் ஆகும். அதனுடன் சுக்கிரனும் சேருகிறது என்றால், அது இன்னும் அதிகமாக தீவிரமடையும்

அற்ப காம ராசிகள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
அற்ப காம ராசிகள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

அவர் பேசும் போது, “ஆண் பெண் சேர்க்கையானது முழுக்க முழுக்க மனதின் விளையாட்டே. இதில், உடலின் தேவை என்பது அதிகபட்சமாக வராது. நீங்கள் வேறு விஷயத்தில், உங்களது முழு கவனத்தையும் செலுத்தி, அதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள் என்றால், காமம் சம்பந்தமான தொந்தரவுகள் உங்களுக்கு பெரிதளவு இருக்காது. 

காமத்தில் நாம் நம்முடைய மனதை இழந்து விடுகிறோம். அதன் காரணமாக அந்த இடத்தில் ஒரு மிருகம் போல நாம் மாறி விடுகிறோம். காமத்தை பொறுத்தவரை, அங்கு சந்திரனுடைய வலிமையே முக்கியம். காரணம் சந்திரன் என்றாலே, அன்பு, பாசம்!

அதில், செவ்வாய் இணையும் பொழுது, அது அதிதீவிரமாக மாறும். காரணம், செவ்வாய் என்பது வேகம் மற்றும் கோபம் கொண்ட கோள் ஆகும். அதனுடன் சுக்கிரனும் சேருகிறது என்றால், அது இன்னும் அதிகமாக தீவிரமடையும். 

ஒருவருக்கு காதல் கல்யாணம் நிகழ வேண்டும் என்றால், அவர்களுக்கு சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோரின் தொடர்பு இருக்க வேண்டும். சந்திரன் மற்றும் சுக்கிரன் வலிமையாக இருந்தால், அந்த நபர் காதலில் அதிக அளவு ஈடுபாடு கொண்டவராக இருப்பார். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்தால், அவர் தீவிர காமப் பிரியனாக மாறுவார். 

சம்ந்தப்பட்ட நபர், ஒருவருடன் அதீத காமத்தோடு இருப்பாரா அல்லது பல பேருடன் அதீத காமத்தோடு இருப்பாரா என்பதை, அவர்களது ஜாதகத்தில் உள்ள கோள்களின் இணைவு மற்றும் பாவங்களில் படக்கூடிய பார்வை, உள்ளிட்டவற்றை வைத்தே கணித்து சொல்ல முடியும். ஆணுக்கு உடல் அடங்கிவிடும். பெண்ணுக்கு மனம் அடங்காது.

அற்ப ராசிகள் என்றால், அதில் முதலில் வருவது மிதுன ராசிதான். அந்த ராசிக்கு செவ்வாய் 6 மற்றும் 11 ம் இடங்களுக்கு உரியவனாக மாறி விடுகிறான். சுக்கிரன் 5 மற்றும் 12ஆம் இடங்களுக்கு உரியவனாக மாறிவிடுகிறான். 

ஆகையால் அவர்கள் இன்ன பிற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள், அவர்களின் உடல் தேவைக்கு ஏதாவது செய்து கொள்வார்களே தவிர, தன்னுடைய பார்ட்னருக்கு பெரிதாக மரியாதை கொடுக்க மாட்டார்கள். 

துலாம் ராசியை பொருத்தவரை, அதனின் 3ம் இடத்திற்கு அதிபதி குரு பகவான். அவர் அறிவுக்குரிய கோள். 7ம் இடத்து அதிபதி செவ்வாய். செவ்வாய் காமத்திற்கானதாக பார்க்கப்படுகிறது. 

இவர்களுக்கு காம உணர்வுகள் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. காரணம் இவர்கள், இன்ன பிற லட்சியங்களில், அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்கள், தொழில், மரியாதை, வருமானம் உள்ளிட்டவற்றில் சீர்தூக்கி பார்க்கக்கூடிய மனநிலை கொண்டவர்கள். இதனால் அவர்கள் பார்ட்னரிடம் பெரிதாக ஈடுபாடு காண்பிக்க மாட்டார்கள்

கும்ப ராசியும் அற்ப காமராசிகளில் தான் வரும். அந்த ராசியின் மூன்றாம் இடத்து அதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். அதனால் இவர்களுக்கு காமமானது இருந்தாலும், அது வேறு விதமாக மாறும். கும்ப ராசியைப் பொருத்தவரை, 3 ம் இடத்தில் செவ்வாயும், 7ம் இடத்தில் சூரியனும் வருகிறார்கள். 

11ம் இடத்தில் குரு வருகிறார். இவர்களுக்கு, பெரியோர்கள் நம்மை மதிக்க வேண்டும்; சமுதாயத்தில் உயர் பதவியில் இருக்க வேண்டும், உள்ளிட்ட எண்ணங்கள் அதிகமாக இருக்கும். அதில் அவர்கள் தீவிரமாக இருப்பார்கள். ஆகையால் இவர்களும் பெரிதாக காமத்தில் ஈடுபாடு காட்டமாட்டர்கள்.”  என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்