Thulam To Meenam: துலாம் முதல் மீனம் வரை.. நாளை ஜனவரி 21ஆம் தேதி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thulam To Meenam: துலாம் முதல் மீனம் வரை.. நாளை ஜனவரி 21ஆம் தேதி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு?

Thulam To Meenam: துலாம் முதல் மீனம் வரை.. நாளை ஜனவரி 21ஆம் தேதி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு?

Marimuthu M HT Tamil Published Jan 20, 2025 05:09 PM IST
Marimuthu M HT Tamil
Published Jan 20, 2025 05:09 PM IST

Thulam To Meenam: துலாம் முதல் மீனம் வரை.. நாளை ஜனவரி 21ஆம் தேதி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? என்பது குறித்துப் பார்ப்போம்.

Thulam To Meenam: துலாம் முதல் மீனம் வரை.. நாளை ஜனவரி 21ஆம் தேதி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு?
Thulam To Meenam: துலாம் முதல் மீனம் வரை.. நாளை ஜனவரி 21ஆம் தேதி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

அப்படி, ஒவ்வொரு நபரும் அந்த தினத்தில் வழிபட்டால் மேன்மையடையலாம். இந்து மத நம்பிக்கைகளின்படி, அனுமனை வணங்குவது நோய்களையும் துன்பங்களையும் நீக்குகிறது.

ஜோதிட கணக்கீடுகளின்படி, வரும் ஜனவரி 21ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றும் சிலருக்கோ, சுமாராக இருக்கும். அப்படி நாளைய தினமான வரும் ஜனவரி 21ஆம் தேதியன்று, எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும்.

யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். குறிப்பாக, துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும் தெரியுமா? அறிந்துகொள்வோம்.

வரும் ஜனவரி 21ஆம் தேதியில் துலாம் முதல் மீனம் வரை ராசியினருக்குண்டான பலன்கள்:

துலாம்: துலாம் ராசியினர் உங்களது உடல் நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டும். நீங்கள் மூத்தவர்களிடம் கவனமாக செயல்பட வேண்டும். நீங்கள் அலுவலக அரசியலுக்கு பலியாகலாம். எண்ணெய் உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

விருச்சிகம்: நீங்கள் குடும்ப உறுப்பினரிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். கூட்டாண்மை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடையே பிரச்னைகள் இருக்கலாம். இது பிளவுகளுக்கு வழிவகுக்கும். பிற்பகலில் உங்களுக்கு சிறிது நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணானவர்கள் உங்கள் இல்வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லக் கற்றுக்கொள்ளுங்கள். 

தனுசு: 

தொழில் மற்றும் நிதி வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பொருளாதார பலவீனத்தைச் சந்திக்க நேரிடும்.

மகரம்:  சிலருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் நேர்மறையான அணுகுமுறையைப் பராமரிக்க வேண்டும். உங்களையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடற்தகுதியில் கவனம் செலுத்துங்கள். அது மிகவும் முக்கியம். 

கும்பம்: 

 உங்கள் நாளின் ஆரம்பம் நன்றாக இருக்கும். ஆனால், மதியத்துக்கு மேல் சுமாராக இருக்கும். சில எதிர்பாராத நிகழ்வுகள் உங்கள் வேலையின் வேகத்தைக் குறைக்கலாம் மற்றும் நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெற முடியாது. அதனால் காலதாமதம் ஏற்படலாம். எனவே, பொறுமை காக்கவும். 

மீனம்: 

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடலுக்குத் தேவையான குடிநீரை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து உங்கள் சுய பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் நிதி நிலையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.