HT Temple Spl: இந்தக் கோயிலில் வழிபட்டால் 3 மாதத்தில் திருமணம் உறுதியாகுமாம்!-வேண்டும் வரம் அருள் சிவன்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: இந்தக் கோயிலில் வழிபட்டால் 3 மாதத்தில் திருமணம் உறுதியாகுமாம்!-வேண்டும் வரம் அருள் சிவன்

HT Temple Spl: இந்தக் கோயிலில் வழிபட்டால் 3 மாதத்தில் திருமணம் உறுதியாகுமாம்!-வேண்டும் வரம் அருள் சிவன்

Manigandan K T HT Tamil
Apr 15, 2024 12:23 PM IST

HT Temple Spl: இங்குள்ள சிற்பங்கள் மிகவும் அழகானவை. கடவுள் சிலைகள் பிரமாண்டமாக இருக்கின்றன. சௌந்தரநாயகி அம்மனுக்கு அமாவாசை, பௌர்ணமி சமயங்களில் பூஜை செய்து வந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சிவ லிங்கம்
சிவ லிங்கம் (Pixabay)

அந்தக் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் அருகே அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ளது சோமநாதர் கோயில்.

உலகின் பல்வேறு நாடுகளில் சிவாலயங்கள் இருக்கின்றன, இருப்பினும், தொன்னாடுடையே சிவனே போற்றி என்பதற்கேற்ப தமிழகத்தில் சிவாலயங்கள் மிக மிக அதிகம்.

இங்குள்ள சிற்பங்கள் மிகவும் அழகானவை. கடவுள் சிலைகள் பிரமாண்டமாக இருக்கின்றன. சௌந்தரநாயகி அம்மனுக்கு அமாவாசை, பௌர்ணமி சமயங்களில் பூஜை செய்து வந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் உருவாக்கிய நகரம் என்பதால் அர்ச்சுன மங்கலம் என அழைக்கப்பட்டு அச்சுதமங்கலம் ஆனது என நம்பப்படுகிறது.

இந்தக் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் முயற்சியால் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரன் வழிபட்ட ஸ்தலம் என்பது இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு.

திருமணமாகாத இருபாலர்களும் இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் 11 விநாயகரும் 3 முருகரும் இருப்பது மற்றொரு சிறப்பு வாய்ந்தது ஆகும். திருமணம் ஆகாதவர்கள் இங்கு உள்ள கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் மூன்று மாதங்களில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

மேலும், கேட்கும் வரத்தை அருளும் கடவுளாக சோமநாதர் வீற்றிருக்கிறார் என்கின்றனர் இவ்வூரைச் சேர்ந்தவர்களும் பக்தர்களும்.

பிரம்மா மற்றும் விஷ்ணுவை உள்ளடக்கிய இந்து மும்மூர்த்திகளான திரிமூர்த்திகளுக்குள் சிவன் அழிப்பவர் என்று அறியப்படுகிறார். சைவ மரபில், பிரபஞ்சத்தை உருவாக்கி, பாதுகாக்கும் மற்றும் மாற்றியமைக்கும் உயர்ந்த கடவுள் சிவன் ஆவார். தெய்வம் சார்ந்த சாக்த பாரம்பரியத்தில், உச்ச தேவி (தேவி) ஆற்றல் மற்றும் படைப்பு சக்தி (சக்தி) மற்றும் சிவனின் இணையான துணையாகக் கருதப்படுகிறார். இந்து மதத்தின் ஸ்மார்த்த பாரம்பரியத்தின் பஞ்சாயத்து பூஜையில் சமமான ஐந்து தெய்வங்களில் சிவனும் ஒருவர்.

சிவனிடம் பல அம்சங்கள் உள்ளன, கருணை மற்றும் பயம். நன்மையான அம்சங்களில், அவர் கைலாச மலையில் துறவு வாழ்க்கை வாழும் ஒரு சர்வ அறிவுள்ள யோகியாகவும், அவரது மனைவி பார்வதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான விநாயகர் மற்றும் கார்த்திகேயாவுடன் ஒரு இல்லத்தரசியாகவும் சித்தரிக்கப்படுகிறார். அவரது கடுமையான அம்சங்களில், அவர் பெரும்பாலும் பேய்களைக் கொல்வதாக சித்தரிக்கப்படுகிறார். சிவன் ஆதியோகி (முதல் யோகி) என்றும் அறியப்படுகிறார், யோகா, தியானம் மற்றும் கலைகளின் கடவுளாகக் கருதப்படுகிறார்.

சிவனுக்கு வேதத்திற்கு முந்தைய வேர்கள் உள்ளன, மேலும் சிவனின் உருவம் பல்வேறு பழைய வேதமற்ற மற்றும் வேதகால தெய்வங்களின் கலவையாக உருவானது, ரிக்வேத புயல் கடவுள் ருத்ரா உட்பட, வேதம் அல்லாத தோற்றம் கொண்டவர். இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் (குறிப்பாக ஜாவா மற்றும் பாலியில்) இந்துக்களால் பரவலாக வணங்கப்படும் தெய்வமாக சிவபெருமான் விளங்குகிறார்.

  • திருகொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோவில்
  •  திருமகளம் மகாகாலநாதர் கோவில்
  •  திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோவில்
  •  தியாகராஜர் கோவில், திருவாரூர்
  •  திருச்செங்கட்டாங்குடி உத்திரபசுபதீஸ்வரர் கோவில்
  • திருச்சேறை ஞானபரமேஸ்வரர் கோவில்
  • திருக்கொல்லம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோவில்
  • திருக்கொல்லிக்காடு அக்னீஸ்வரர் கோவில்

ஆகிய கோயில்கள் திருவாரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்கள் ஆகும்.

 

 

 

 

 

Whats_app_banner