தமிழ் செய்திகள்  /  Astrology  /  You Should Never Buy This From Anyone Else

Vastu Shastra : இதை கண்டிப்பாக பிறரிடம் இருந்து நீங்கள் தானமாக வாங்கவே கூடாது.. வாங்கினால் பிரச்சனை தான்!

Divya Sekar HT Tamil
Jan 25, 2024 02:48 PM IST

சாஸ்திரப்படி நாம் எந்தெந்த பொருட்களை பிறரிடம் இருந்து தானமாக வாங்க கூடாது. பணம் கொடுத்து எந்த பொருளை நாம் பிறரிடம் இருந்து வாங்க வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.

இதை கண்டிப்பாக பிறரிடம் இருந்து நீங்கள் தானமாக வாங்கவே கூடாது
இதை கண்டிப்பாக பிறரிடம் இருந்து நீங்கள் தானமாக வாங்கவே கூடாது

ட்ரெண்டிங் செய்திகள்

நாம் ஒருபோதும் ஒருவரிடம் இருந்து கசப்பான பொருளை ஒருவரிடம் இருந்து வாங்க கூடாது. அதேபோல  இரும்பு சம்பந்தமான பொருட்களையும் ஒருவரிடம் இருந்து தானமாக வாங்க கூடாது. அதேபோல இரும்பு சம்பந்தமான பொருட்களை நீங்கள் ஒருவருக்கு தானமாக கொடுக்கவும் கூடாது.

இரும்பு சம்பந்தமான ஆயுதங்களை ஒருவர் கையில் வைத்திருந்தால் அதை நீங்கள் வாங்கக்கூடாது. அப்படி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்த பொருளை நீங்கள் கீழே வைத்து விட வேண்டும். அதன் பிறகு அந்த நபர் அந்த பொருளை எடுக்கலாம்.

அதேபோல ஜோதிட சாஸ்திரப்படி ஊசி போன்ற பொருட்களையும் பணம் கொடுக்காமல் நாம் யாரிடம் இருந்தும் வாங்கக்கூடாது. இரும்பு சார்ந்த பொருட்கள் என்பது சனிபகவானுக்கு உகந்த பொருட்களாக பார்க்கப்படுகிறது.

எனவே ஊசி போன்ற பொருளை பணம் கொடுக்காமல் ஒருவரிடம் இருந்து வாங்கும் போது அது சில பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்த கூடும். எனவே இனி அப்படி செய்யாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

அதேபோல பால் ஒருவரிடம் இருந்து பணம் பெறாமல் கொடுக்கக் கூடாது. அதேபோல பாலை ஒருவரிடம் இருந்து தானமாக நீங்கள் பெற்றுவிடக்கூடாது. பணம் கொடுக்காமல் நீங்கள் பாலை வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ உங்கள் வீட்டில் கடன் சுமை அதிகரிக்குமாம். வீட்டில் அமைதியான சூழல் விலகி பிரச்சனைகள் அதிகரிக்குமாம். எனவே பாலை ஒருவரிடம் தானமாக பெறவும் வேண்டாம். தானமாக கொடுக்கவும் வேண்டாம்.

 வீட்டில் பயன்படுத்தும் துடைப்பத்தை ஒருவருக்கு நீங்கள் தானமாக கொடுக்கவும் கூடாது. அதனை தானமாக நீங்கள் வாங்கவும் கூடாது. அதேபோல பிறர் பயன்படுத்திய ஆடைகளை நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல நீங்கள் பயன்படுத்தி ஆடையை பிறருக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

 வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பயன்படுத்தும் எண்ணையை நீங்கள் ஒருவருக்கு தானமாக வழங்கவும் கூடாது தானமாக பெறவும் கூடாது. அப்படி செய்தால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவே இனி அப்படி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் ஒருவருக்கு பித்தளை, தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை தானமாக கொடுக்கலாம். ஆனால் இரும்பு பொருட்களை மட்டும் தானமாக கொடுக்காதீர்கள்.

அதேபோல யானை சிலையை சிலருக்கு பரிசாக நீங்கள் அளிக்கக்கூடாது. ஏனெனில் அது அவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்த கூடும். ஆனால் நீங்கள் ஜோடியாக இருக்கும் யானை சிலையை ஒருவருக்கு வழங்கலாம். அதேபோல ஒருவருக்கு துண்டு மற்றும் கை குட்டையை இனாமாக கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். அப்படி கொடுக்கக் கூடாது. ஏனெனில் இது கொடுப்பவருக்கும் வாங்குபவர்களுக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக கைகடிகாரமோ அல்லது சுவற்றில் மாற்றும் கடிகாரத்தையோ பரிசாக அளிப்பது வழக்கம். அப்படி அளிப்பது அவர்கள் ஆயுட்காலத்தை குறைக்கும் எனவும் எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்படக்கூடும் எனவும் சாத்திரங்களில் சொல்லப்படுவதாக கூறப்படுகிறது.எனவே இனி இந்த மாதிரியான பொருட்களை ஒருவருக்கு தானமாக வழங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

நன்றி : AisHutte

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்