எதிர்மறை சக்திகளை விரட்ட தூபம் போட வேண்டும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  எதிர்மறை சக்திகளை விரட்ட தூபம் போட வேண்டும்!

எதிர்மறை சக்திகளை விரட்ட தூபம் போட வேண்டும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 11, 2022 04:45 PM IST

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்ட வாரம் மூன்று முறை சாம்பிராணி தூபம் போட வேண்டும்.

<p>சாம்பிராணி தூபம்&nbsp;</p>
<p>சாம்பிராணி தூபம்&nbsp;</p>

இது போன்ற போட்டோக்கள்

ஆனால் தீமைகளின் தாக்கம் உடனே பரவும். இது போன்ற எதிர்மறை சக்திகள் பரவாமல் இருப்பதற்காக நமது வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவார்கள். நல்ல நறுமணம் நல்ல மனநிலையையும், நல்ல சுற்றத்தையும் கொடுக்கும்.

எதிர்மறை சக்திகளை போக்கும் தூபம்

நெருப்புக் கங்குகளில் சாம்பிராணி போட்டு தூபம் காட்டுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால், தாமரை விதை, காய்ந்துபோன ஆவாரம் பூ, வெள்ளை குங்கிலியம் ஆகிய மூன்று பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும். 

சாதாரண முறையில் தூபம் போடும் போது இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து சாம்பிராணி போட்டு வீடு முழுக்க தூபம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் துஷ்ட சக்திகளின் செயல்பாடு அறவே இருக்காது.

இந்த தூபத்தை, வாரத்தின் முக்கியமான நாட்களான திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் போடலாம். வீட்டில் எப்போதும் சிக்கல், கஷ்டம், மந்தநிலை, அசுப காரியங்கள் போன்றவை நடந்தால் தூபம் போட்டு இது போன்ற பிரச்னைகளை நிவர்த்தி செய்யுங்கள்.

வீட்டில் இருக்கும் போது நம்மைச் சுற்றி ஏதேனும் வித்தியாசமான செயல்கள் நடந்து கொண்டே இருந்தால், தனிமையாக இருப்பது போல் உணர்ந்தால் தூபம் காட்டி வீடு முழுக்க இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டும். அதேபோல் பலர் நம் முன்னேற்றத்தைக் கண்டு பல துஷ்ட சக்திகளை நம் மீது ஏவி விடுவார்கள். அவையெல்லாம் வராமல் இருக்க வீட்டில் தூபம் போடுவது அவசியமாகும்.

Whats_app_banner