வைகாசி மாத அவதாரங்கள்.. நெற்றிக்கண் தீப்பொறியில் முருக பெருமான்.. வைகாசி சிறப்புகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வைகாசி மாத அவதாரங்கள்.. நெற்றிக்கண் தீப்பொறியில் முருக பெருமான்.. வைகாசி சிறப்புகள்!

வைகாசி மாத அவதாரங்கள்.. நெற்றிக்கண் தீப்பொறியில் முருக பெருமான்.. வைகாசி சிறப்புகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 15, 2025 07:00 AM IST

வைகாசி தான் சமஸ்கிருதத்தில் விசாகம் என அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் புனித நதிகளில் நீராடி மகாவிஷ்ணுவை வழிபட்டு துளசி இலையால் அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வைகாசி மாத அவதாரங்கள்.. நெற்றிக்கண் தீப்பொறியில் முருக பெருமான்.. வைகாசி சிறப்புகள்!
வைகாசி மாத அவதாரங்கள்.. நெற்றிக்கண் தீப்பொறியில் முருக பெருமான்.. வைகாசி சிறப்புகள்!

இது போன்ற போட்டோக்கள்

வளம் தரக்கூடிய வைகாசி மாதத்தை மாதவ மாதம் எனவும் வைகாசம் என்றும் போட்டு இருக்கின்றனர். வைகாசி மாதத்தின் முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.

வைகாசி தான் சமஸ்கிருதத்தில் விசாகம் என அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் புனித நதிகளில் நீராடி மகாவிஷ்ணுவை வழிபட்டு துளசி இலையால் அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வைகாசி மாதத்தில் பல கடவுள்களின் அவதாரங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

வைகாசி மாத அவதாரங்கள்

வைகாசி பௌர்ணமி திருநாளன்று சிவபெருமானின் நெற்றிக்கண்களில் இருந்து வெளியான தீ பொறி ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தோன்றியது. அதன்பின் பார்வதி தேவியால் ஒன்றிணைக்கப்பட்ட குழந்தைதான் முருக பெருமான்.

மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் உக்கர அவதாரமாக கருதப்படுவது நரசிம்ம அவதாரம். வைகாசி சுற்றுலா சதுர்த்தசி திருநாளில் தான் மகாவிஷ்ணு தனது பக்தன் பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என கூறப்படுகிறது.

அமைதியின் வடிவமாக திகழ்ந்துவரும் கௌதம புத்தர் அவதரித்ததாக கூறப்படுவது இந்த வைகாசி பௌர்ணமி திருநாளில் தான். அதேசமயம் கயாவில் போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதும் இதே வைகாசி பௌர்ணமி திருநாளில் தான் என கூறப்படுகிறது.

வைகாசி மாதத்தில் மூல நட்சத்திர திருநாள் தான் திருஞானசம்பந்தரின் திரு நட்சத்திர தினம் என அழைக்கப்படுகிறது. அதனைக் கொண்டாடும் விதமாக ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தருக்கு மிகப்பெரிய விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருக்கோட்டியூர் நம்பிகள், நம்மாழ்வார் உள்ளிட்டோர் இதே வைகாசி மாதத்தில் தான் அவதரித்தார்கள் என கூறப்படுகிறது.

வைகாசி பௌர்ணமி திருநாளில் தான் காஞ்சி பெரியவர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆதிசங்கரர் தோன்றியதும் வைகாசி பஞ்சமி திருநாளில் என கூறப்படுகிறது.

வைகாசி வழிபாடு

வைகாசி பௌர்ணமி திருநாளன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டை சாற்றி, பத்மராக கற்களை 108 வைத்து மாலை செய்து அணிவித்து எல் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.

வைகாசி மாதத்தில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அப்படி கடைபிடிக்கும் விரதம் ரிஷப விரதம் என அழைக்கப்படுகிறது.

இதே வைகாசி விசாகத்தில்தான் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணங்களில் கூறப்படுகின்றன. அன்றைய தினம் எமதர்மராஜன் எழுந்தருளி இருக்கக்கூடிய ஸ்ரீ வாஞ்சியம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கக்கூடிய திருப்பஞ்சலி திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் வழிபாடு நடத்தப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.