Thirumoolanatha: தன்னுடைய வேலையை பார்த்த சுந்தரர்.. உணர்த்திய திருமூலநாத சுவாமி.. கண்கலங்கவிட்ட சிவபெருமான்!
Thirumoolanatha: எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திருமலநாதர் சுவாமி திருக்கோயில்.

Thirumoolanatha: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகத்தில் மனித உயிரினங்கள் பிறப்பதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
மன்னர்கள் காலம் தொடங்கியதில் இருந்து இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காக சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து நின்று வரை வானுயர்ந்து கம்பீரமாக காணப்படுகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டுப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பல வரலாறுகளை சுமந்து பல சிவபெருமான் கோயில்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.
சோழ மன்னர்களில் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை அதற்கு சான்றாக திகழ்ந்து வருகிறது. பல சிவபெருமான் கோயில்கள் இன்று வரை கட்டிடக்கலைக்குச் சான்றாக திகழ்ந்து வருகிறது. இது எப்படி கட்டி இருக்க முடியும் என இன்று வரை ஆராய்ச்சியாளர்கள் வியந்து வருகின்றனர்.
அதுபோன்ற எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திருமலநாதர் சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருமூலநாதர் சுவாமி, திருமூலநாதமுடையார், மூலஸ்தான உடையார் எனவும் தாயார் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் கோட்டை விநாயகர் என அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் இந்த கோயிலில் இருக்கக்கூடிய திருமூலநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.
மேலும் கோட்டை விநாயகரை வழிபட்டால் நமது நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. மேலும் மூல நாதராக வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சன்னதிக்கு அருகே தனியாக அகிலாண்டேஸ்வரி காட்சி கொடுத்து வருகிறார். அம்பாள் சொன்னதுக்கு எதிரே இருக்கக்கூடிய புஷ்கரணி திருத்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தக் கரையில் அமர்ந்து அகிலாண்டேஸ்வரி அம்பாள் தவம் புரிந்து சிவபெருமானின் திருமணம் செய்து கொண்டதாக புராணத்தில் கூறப்படுகிறது.
தல வரலாறு
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்த மக்கள் இறைவன் மீது அதிகம் நாட்டமில்லாமல் பக்தி இல்லாமல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் இறை பக்தியில் ஈடுபட வேண்டும் என சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இறை பக்தியை உருவாக்குவதற்கு யாரை அனுப்ப வேண்டும் என நந்தி பெருமானிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு நந்தி பெருமான் சுந்தரரை அனுப்பும்படி அறிவுரை கூறியுள்ளார். அதன்படி சுந்தரர் பூமிக்கு வந்தார். அப்போது ஒரு இடத்தில் மாடு மேய்ப்பவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரைச் சுற்றி மாடுகள் அழுது கொண்டிருந்தன. உடனே அவரது உடலுக்குள் சுந்தரர் புகுந்து மறு உரு பெற்றார். மாடு மேய்ப்பவன் உருவத்தில் இருந்த சுந்தரர் வந்த காரியம் அறியாது நிறைவேற்றாமல் அவரது உருவிலேயே அவரது வீட்டிற்கு சென்றார்.
இதனைக் கண்டறிந்த சிவபெருமான் சுந்தரரின் வேலையினை உணர்த்துவதற்காக முனிவர் வேடத்தில் சென்று அவரிடம் யாசகம் கேட்டார். சுந்தர் உணவு எடுத்துக் கொண்டு வருவதற்குள் முனிவர் வேடத்தில் இருந்த ஈசன் அங்கிருந்து சென்றார். வந்து பார்த்தபோது முனிவர் இல்லாததை கண்டு சுந்தர் கண்கலங்கினார். பின்னர் அந்த முனிவரின் கால் தடம் ஒரு திசையை நோக்கிச் சென்றது.
அந்த முனிவரின் கால் தடம் திசை நோக்கி சுந்தரர் பின் தொடர்ந்தார். அந்த கால்தடம் சிதம்பரத்தில் சென்றடைந்தது. அங்கே முனிவராக வந்தது சிவபெருமான் தான் கன சுந்தரர் உணர்ந்தார். சுந்தரருக்கு வந்த காரணம் குறித்து சிவபெருமான் அந்த இடத்தில் உணர்த்தினார். அவர் உணர்த்திய இடம் தற்போது நாம் வணங்கிக் கொண்டிருக்கும் திருமூலநாதர் சுவாமி ஆகும். அங்கேயே கோயில் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
