கரணநாத வழிபாடு: எம்ஜிஆர் முதல் யோகி பாபு வரை.. கரணநாத வழிபாடு.. சக்சஸ் சீக்ரெட் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கரணநாத வழிபாடு: எம்ஜிஆர் முதல் யோகி பாபு வரை.. கரணநாத வழிபாடு.. சக்சஸ் சீக்ரெட் தெரியுமா?

கரணநாத வழிபாடு: எம்ஜிஆர் முதல் யோகி பாபு வரை.. கரணநாத வழிபாடு.. சக்சஸ் சீக்ரெட் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 15, 2025 01:35 PM IST

Karanam worship: கரணத்தில் ஒரு கிரகம் அதிபதியாகவும், குறிப்பிட்ட தெய்வம் மற்றும் விலங்கு, பறவை உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இவைகளை வளர்ப்பதன் மூலம் கரண நாதனை வழிபாடு செய்ய முடியும். கரண நாதனின் வழிபட்டால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கரணநாத வழிபாடு: எம்ஜிஆர் முதல் யோகி பாபு வரை.. கரணநாத வழிபாடு.. சக்சஸ் சீக்ரெட் தெரியுமா?
கரணநாத வழிபாடு: எம்ஜிஆர் முதல் யோகி பாபு வரை.. கரணநாத வழிபாடு.. சக்சஸ் சீக்ரெட் தெரியுமா?

இது போன்ற போட்டோக்கள்

கரணநாதனால் கிடைக்கும் வெற்றி

நம்மில் பலருக்கும் அவர்களுடைய நட்சத்திரம் மற்றும் ராசி கட்டாயம் திறந்திருக்கும். சிலர் தங்களுக்கு நடைபெறும் தசா மற்றும் புத்தி வரை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் கரணநாதன் குறித்து பலருக்கும் தெரியாது. ஜோதிடர்கள் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் ராசி நட்சத்திரம் லக்னம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு கரணம் மிக முக்கியமாகும். கரணங்கள் என்பது ஒரு நாளில் வரும் திதியில் அறை பகுதியாகும். மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன.

நாம் பிறக்கும் நேரத்தில் ஒரு கரணம் நடப்பில் இருக்கும். அந்த தருணத்தில் இருக்கக்கூடிய தெய்வம் மற்றும் கிரகம் உள்ளிட்டவைகளை வழிபடும் முறை கரணநாதனை குறிக்கும் எனக் கூறப்படுகிறது. விலங்கு, பறவைகள் உள்ளிட்டவைகளை வளர்ப்பது மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வது போன்றவைகள் மூலம் வெற்றிகளை பெறலாம்.

கரணநாத வழிபாடு

கரணத்தில் கரசை, பாலவம், பவம் என 11 வகைகள் உள்ளன. இதில் ஒன்றில் தான் நம் பிறந்திருப்போம். இதுகுறித்து நமது ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். தெரியாதவர்கள் அதனைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த கரணத்தில் ஒரு கிரகம் அதிபதியாகவும், குறிப்பிட்ட தெய்வம் மற்றும் விலங்கு, பறவை உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இவைகளை வளர்ப்பதன் மூலம் கரண நாதனை வழிபாடு செய்ய முடியும். கரண நாதனின் வழிபட்டால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

எம்ஜிஆர் முதல் யோகி பாபு வரை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் எதற்காக சிங்கத்தை வளர்த்தார் என பலருக்கும் தெரியாது. நடிகர் ரஜினிகாந்த் படங்களில் பாம்பு காட்சிகள் அதிகம் வருவதை அனைவரும் பார்த்திருப்போம். சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்து வளர்க்கின்றனர். இதுபோல விலங்குகளை தத்தெடுத்து வளர்ப்பது எதற்கு தெரியுமா? இது கரண நாதன் வழிபாடு தான் என கூறப்படுகிறது

அடிமைப்பெண் திரைப்படத்தில் வரும் சிங்கத்தை எம்ஜிஆர் வளர்த்து வந்தார். எம்ஜிஆர் தனது கரண நாதனுக்கு உண்டான விலங்கை வளர்த்து நடிப்பில் உச்சம் தொட்டார். அதற்குப் பிறகு முதலமைச்சரானார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடிகர் ரஜினிகாந்த் படங்களில் பாம்பு காட்சிகள் அதிகம் இருப்பதை நாம் கவனித்து இருக்கின்றோம். தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம் தொடங்கி படையப்பா வரை பாம்பு காட்சிகள் அவரது திரைப்படத்தில் அதிகம் இடம் பெற்று இருக்கும். இதுவும் கரண நாத வழிபாடு தான் என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி

நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி தங்களது கரண நாதனை வழிபடுவதற்காகவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கக்கூடிய புலி மற்றும் சிங்கத்தை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதன் காரணமாகவே அவர்கள் சினிமா துறையில் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் யோகி பாபு வாராஹி அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். இது அவருடைய கரண நாத கடவுளாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அவர் நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

அனைவரும் தங்களது ஜாதகத்தில் இருக்கக்கூடிய கரணம் பற்றி தெரிந்து கொண்டு அதற்கான வழிபாட்டு முறைகளை செய்து வெற்றியை நமக்கானதாக மாற்றிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

கட்டுரையாளர்:

ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர்

astrovenkataeswar@gmail.com

91590 13118

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner