Tamil New Year 2025: பிறந்துவிட்டது சித்திரை.. விசுவாவசு நல்ல காலம்.. தமிழ் புத்தாண்டின் பாரம்பரியம்.. ஆரம்பிக்கலாமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil New Year 2025: பிறந்துவிட்டது சித்திரை.. விசுவாவசு நல்ல காலம்.. தமிழ் புத்தாண்டின் பாரம்பரியம்.. ஆரம்பிக்கலாமா?

Tamil New Year 2025: பிறந்துவிட்டது சித்திரை.. விசுவாவசு நல்ல காலம்.. தமிழ் புத்தாண்டின் பாரம்பரியம்.. ஆரம்பிக்கலாமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 14, 2025 06:00 AM IST

Tamil New Year 2025: சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாள்தான் சித்திரை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் அப்போதுதான் பிறக்கின்றது. தமிழ் மாதங்களின்படி சித்திரை மாதம் முதல் மாதமாக கருதப்படுகிறது. அந்த நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

Tamil New Year 2025: பிறந்துவிட்டது சித்திரை.. விசுவாவசு நல்ல காலம்.. தமிழ் புத்தாண்டின் பாரம்பரியம்.. ஆரம்பிக்கலாமா?
Tamil New Year 2025: பிறந்துவிட்டது சித்திரை.. விசுவாவசு நல்ல காலம்.. தமிழ் புத்தாண்டின் பாரம்பரியம்.. ஆரம்பிக்கலாமா?

இது போன்ற போட்டோக்கள்

சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாள்தான் சித்திரை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் அப்போதுதான் பிறக்கின்றது. தமிழ் மாதங்களின்படி சித்திரை மாதம் முதல் மாதமாக கருதப்படுகிறது. அந்த நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு முக்கியத்துவம்

தமிழ் புத்தாண்டு பண்டிகை ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசுமை மற்றும் நலத்தை வரவேற்கும் நாளாக கருதப்படுகிறது. தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சாஸ்திரங்களிலும் தமிழ் புத்தாண்டு மிக முக்கிய நாளாக கொண்டாடுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தமிழ் புத்தாண்டை தமிழர்கள், குடும்ப ஒற்றுமை, ஆன்மீகம் மற்றும் தங்களது நம்பிக்கைகளோடு இணைத்து பார்த்துள்ளனர். இயற்கையின் சுழற்சி மனித வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்த்தும் நாளாக இந்த தமிழ் புத்தாண்டு திகழ்ந்து வருகின்றது.

சூரிய பகவான் மேஷ ராசியின் நுழைவதை புத்தாண்டில் தொடக்கமாக முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். விவசாயம் செய்யக்கூடிய காலத்தின் தொடக்கமும் இதுதான் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த திருநாளை விவசாயத்தோடு ஒப்பிட்டு பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் புத்தாண்டு திருநாளில் அதிகாலை எழுந்து வீடு முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, பூக்களால் அலங்காரம் செய்து, பூக்கோலம் இட்டு, விளக்கேற்றி இறைவனை வழிபாடு செய்து கொண்டாடுகின்றனர். புத்தாடை அணிந்து தங்களது மகிழ்ச்சியை அனைவரும் வெளிப்படுத்திகின்றனர்.

அதன் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி வயதில் மூத்தவர்களிடம் ஆசி பெற்று கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்கின்றனர். இந்த தமிழ் புத்தாண்டு நாட்களில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில இடங்களில் பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

பண்டிகைகள் என்றாலே உணவு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த தமிழ் புத்தாண்டு திருநாளில் சிறப்பு வகை உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. அனைத்து சுவைகளையும் ஒன்று திரட்டி புத்தாண்டு பச்சடி என்று சில இடங்களில் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது வாழ்க்கையின் அனுபவத்தை வெளிப்படுத்தும் சின்னமாக கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனம், இசை, நாடகங்கள் என கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் நிகழ்த்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் வெகு விமர்சையாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் புத்தாண்டு சம்பிரதாயத்திற்காக கொண்டாடப்படும் நிகழ்வு கிடையாது. இது பாரம்பரியம், குடும்பம், ஆன்மீகம், வாழ்வியல் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்த மிகப்பெரிய பண்டிகை எனக் கூறப்படுகிறது. மக்களின் வாழ்வியலோடு ஒத்துப் போகும் கலாச்சார திருவிழாக்களில் தமிழ் புத்தாண்டு மிகப்பெரிய பண்டிகையாக கருதப்படுகிறது.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner