Thiruppugazh: காம வலையில் சிக்கிய அருணகிரி.. உயிர் கொடுத்த முருகப்பெருமான்.. ஊற்றெடுத்து பெருகிய திருப்புகழ்!
Thiruppugazh: தமிழ் கடவுளாக விளங்கக்கூடிய முருகப்பெருமானை தமிழ் வார்த்தைகளால் அலங்காரம் செய்தவர் அருணகிரிநாதர். முருகப்பெருமானால் அருளப்பட்டு அருணகிரிநாதர் உதிர்த்த தமிழ் சொற்கள் தான் இன்று வரை திருப்புகழாக வாழ்ந்து வருகின்றது.

Thiruppugazh: உலகம் முழுவதும் பல மதங்களை பின்பற்றி பல கடவுள்கள் இருந்தாலும் மிகப்பெரிய சமூகத்தின் முழு முதற்கடவுளாக திகழ்ந்து வருபவர் முருகப்பெருமான். தமிழ் மொழியின் கடவுளாகவும் தமிழ் மக்களின் குலதெய்வமாகவும் முருகப்பெருமான் விளங்கி வருகின்றார். உலகம் முழுவதும் முருக பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
அறுபடை வீடு கொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை முருக பெருமான் பாதுகாத்து வருவதாக புராணங்களில் கூறுவது உண்டு. முருகப்பெருமானை பாராட்டி பலரும் தங்களது தமிழ் வார்த்தைகளால் அலங்காரம் செய்துள்ளனர். அப்படி உருவானது தான் திருப்புகழ்.
தமிழ் கடவுளாக விளங்கக்கூடிய முருகப்பெருமானை தமிழ் வார்த்தைகளால் அலங்காரம் செய்தவர் அருணகிரிநாதர். முருகப்பெருமானால் அருளப்பட்டு அருணகிரிநாதர் உதிர்த்த தமிழ் சொற்கள் தான் இன்று வரை திருப்புகழாக வாழ்ந்து வருகின்றது.
அருணகிரிநாதர் வரலாறு
முருகப்பெருமானின் புகழைப் பரப்பும் விதமாக திருப்புகழை கொடுத்தவர் அருணகிரிநாதர். 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பகுதியில் இவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து அதிகாரப்பூர்வமான குறிப்புகள் எதுவும் கிடையாது. அருணகிரிநாதர் பற்றி நாம் அறியும் அனைத்து செய்திகளும் செவிவழிச் செய்தியே ஆகும். சினிமாவில் வந்த அருணகிரிநாதர் திரைப்படமும் செவிவழிச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவெண்காடர் முத்தம்மை என்ற தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. முதல் குழந்தை ஆதிலட்சுமி, இரண்டாவது குழந்தை அருணகிரி. அருணகிரிநாதரின் தந்தை திருவெண்காடர் வணிகத்தில் ஈடுபட்டு மிகவும் வசதியாக வாழ்ந்து வந்தார்.
செல்வத்தின் இன்பத்தில் வாழ்ந்து வந்த அருணகிரி, ஏமாற்று வேளையில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீடே கதியாக கடந்துள்ளார். வீட்டில் இருக்கும் பணம் பொருட்களை அள்ளி அள்ளி அந்த பெண்ணிடம் கொடுத்து வாழ்ந்து வந்தார். பெண்ணின் மயக்கத்தில் இருந்த அருணகிரியை நினைத்து அவரது தாயார் வருத்தத்தில் உயிரிழந்தார்.
மேலும் படிங்க| சனி யோகத்தை முழுமையாக அனுபவிக்கும் ராசிகள் இவர்கள்தான்
அதன் காரணமாக அருணகிரியை பார்த்துக் கொள்ளும் வேலை அவருடைய அக்கா ஆதிலட்சுமியிடம் வந்தது. திருமணம் செய்து வைத்தால் இதுபோன்ற செயல்பாடுகளில் அருணகிரி ஈடுபட மாட்டார் என அவரது அக்கா ஆதிலட்சுமி அருணகிரிக்கு திருமணம் செய்து வைத்தார்.
இருப்பினும் அருணகிரி திருந்திய பாடு கிடையாது. அனைத்து சொத்துக்களையும் கரைத்து அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டார். வறுமையின் சூழ்நிலையில் அருணகிரி வரும் நேரத்தில் அவருக்கு தொழுநோய் தொற்றிக் கொண்டது. அந்த நேரத்தில் ஏமாற்று வேளையில் ஈடுபட்ட பெண் அருணகிரியை விட்டு விலகினார்.
பெண் போதையில் திரிந்து கொண்டிருந்த அருணகிரி பைத்தியம் பிடித்தது போல் மாறினார். உனக்கு தேவை பெண் தானே என்னை ஏற்றுக் கொள் என்று அவரது அக்கா கூறினார். அது அருணகிரிக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இத்தனை காலம் தான் செய்த தவறை உணர்ந்த அருணகிரி கோயில் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது அருணகிரியை ஆட்கொண்டார் முருகப்பெருமான். நீ என்னை சேரும் காலம் இன்னும் வரவில்லை என்று கூறி முருக பெருமான் ஆறெழுத்து மந்திரத்தை அருணகிரிக்கு உபதேசம் செய்தார். உடனே முருகப்பெருமான் முத்து என்று அருணகிரிக்கு அடியெடுத்து கொடுத்தார். உடனே அருணகிரிநாதர் ‘முத்தைத் தரு பத்தித் திரு நகை’ என்று திருப்புகழை இடைவிடாது பாடினார்.
மேலும் படிங்க| புதன் பெயர்ச்சி மூலம் ராஜ யோகத்தை தருகின்ற ராசிகள்
பொள்ளாப் பிள்ளையார்
முருக பெருமான் அருணகிரியை குமார வயலூருக்கு வரும்படி கூறினார். அந்த இடத்தில் சுயம்புவாக பொல்லாப் பிள்ளையார் காட்சி கொடுத்தார். அருணகிரிநாதர் பாடிய பாடலுக்கு திருப்புகழ் என்று அவர்தான் பெயர் சூட்டியுள்ளார். புலிகுண்டு செதுக்கப்படாத சுயம்பு விநாயகராக அங்கு பொள்ளாப் பிள்ளையார் காட்சி கொடுத்து வருகிறார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்று பொருளாகும். காலப்போக்கில் பொள்ளாப் பிள்ளையார் பொல்லாப் பிள்ளையாராக மாறினார்.
இந்த அருணகிரிநாதர் வரலாறு செவிவழிச் செய்தியாக கூறப்படுவது தான். திருப்புகழ் மீது ஈடுபாடு கொண்ட பலரும் இந்த வரலாற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பெண்களின் மாய வலையில் விழுந்துவதனால் ஏற்படும் துன்பங்களையும், அதிலிருந்து மீண்டும் முருகப் பெருமானை சரணடையும் வலிகளையும் திருப்புகழில் அருணகிரிநாதர் போதித்துள்ளார் என கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
