Brahmapureeswarar: பிரம்மதேவர் தலையை கொய்த சிவபெருமான்.. தலையெழுத்தை மாற்றும் பிரம்மன்.. அருள் புரியும் பிரம்மபுரீஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Brahmapureeswarar: பிரம்மதேவர் தலையை கொய்த சிவபெருமான்.. தலையெழுத்தை மாற்றும் பிரம்மன்.. அருள் புரியும் பிரம்மபுரீஸ்வரர்

Brahmapureeswarar: பிரம்மதேவர் தலையை கொய்த சிவபெருமான்.. தலையெழுத்தை மாற்றும் பிரம்மன்.. அருள் புரியும் பிரம்மபுரீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2025 07:00 AM IST

Brahmapureeswarar: அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருச்சி திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் தினமும் தாயார் பிரம்மநாயகி இந்த திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Brahmapureeswarar: பிரம்மதேவர் தலையை கொய்த சிவபெருமான்.. தலையெழுத்தை மாற்றும் பிரம்மன்.. அருள் புரியும் பிரம்மபுரீஸ்வரர்
Brahmapureeswarar: பிரம்மதேவர் தலையை கொய்த சிவபெருமான்.. தலையெழுத்தை மாற்றும் பிரம்மன்.. அருள் புரியும் பிரம்மபுரீஸ்வரர்

இது போன்ற போட்டோக்கள்

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்களின் கட்டுமானங்களை கண்டு இன்றும் ஆராய்ச்சியாளர்கள் வியந்து வருகின்றனர்.

மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கட்டிடக்கலைக்கு சான்றாக திகழ்ந்து வருகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் என தமிழ்நாடு முழுவதும் பல கோயில்கள் கலைநயத்தின் களஞ்சியமாக திகழ்ந்து வருகின்றன.

அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இதுபோல எத்தனையோ திருக்கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருச்சி திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் தினமும் தாயார் பிரம்மநாயகி இந்த திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலின் தீர்த்தமாக பிரம்ம தீர்த்தம் விளங்கி வருகிறது தல விருட்சமாக மகிழ மரம் திகழ்ந்து வருகிறது.

தல சிறப்பு

பிரம்ம தேவர் வழிபட்ட ஷோடச லிங்கம் தனிமண்டபத்தில் இங்கு காட்சி கொடுத்து வருகிறது. சிவபெருமான் பிரம்ம தேவருக்கு சாப விமோசனம் கொடுத்து அருள் கொடுத்த திருக்கோயிலாக இது திகழ்ந்து வருகின்றது.

அதனை பெருமைப்படுத்தும் விதமாக இந்த கோயிலில் பிரம்ம தேவருக்கு பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டு தனி சன்னதி உள்ளது. இந்த கோயிலில் மேற்கு நோக்கி கால பைரவர் காட்சி கொடுத்த வருகின்றார். மேலும் சிவபெருமானின் சன்னதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி கொடுத்த வருகிறார்.

தஞ்சை பெருவுடையார் திருக்கோவிலுக்கு முற்பட்டதாக இந்த கோயில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய நந்தி பெருமானை தடவிக் கொடுத்தால் நிஜ காளையை தொடுவது போல உணர்வு ஏற்படும் என கூறப்படுகிறது. பிரதோஷ நாட்களில் இந்த நந்தி பெருமானை தொடுவதற்காகவே ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

தல வரலாறு

சிவபெருமானிடம் இருந்து இந்த உலகத்தை படைக்கும் ஆற்றலை பிரம்மதேவர் பெற்றிருந்தார். தன்னைப் போலவே செம அந்தஸ்து கொடுத்து சிவபெருமான் பிரம்மதேவருக்கு ஐந்து தலைகளை கொடுத்தார். படைப்பு தொழிலில் அனுபவம் பெற்றார் பிரம்மதேவர். அதன் காரணமாக தன்னையும் சிவனோடு ஒப்பிட்டு ஆணவத்தோடு திரிந்தார்.

இதுகுறித்து அருந்த சிவபெருமான் அவருக்கு பாடம் புகுத்த விரும்பினார். அதன் காரணமாக பிரம்ம தேவருக்கு இருந்த ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்து எடுத்தார். அதேசமயம் அவரது படைப்பு தொழிலையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் பிரம்மதேவர் தான் செய்த தவறை உணர்ந்தார். சிவபெருமானிடம் சாப விமோசனம் கேட்டு வருந்தினார்.

பூமியில் திருப்பட்டூர் என்ற இடத்தில் குடி கொண்டிருக்கும் எண்ணெய் 12 லிங்க வடிவில் வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றுக் கொள் என சிவபெருமான் அருள் வழங்கினார். அவ்வாறு பிரம்ம தேவர் இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாப நிவர்த்தி பெற்று, படைப்பு தொழிலை மீண்டும் பெற்றார்.

அதேசமயம் என்னை வழிபாடு செய்து மகிழ்வித்த காரணத்திற்காக இங்கு வருபவர்களின் தீமை செய்யக்கூடிய தலையெழுத்தை மாற்றி மங்களகரமான தலையெழுத்தை கொடுக்க வேண்டும் என்று பிரம்ம தேவருக்கு வரம் அளித்தார் சிவபெருமான். அன்றிலிருந்து இங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரம்மதேவர் தலையெழுத்தை மாற்றி அமைப்பதாக ஐதீகம்.

இங்கு காணக்கூடிய சிவபெருமானை பிரம்மதேவர் வழிபட்ட காரணத்தினால் இவர் பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்தை பெற்றார். அம்பாளுக்கு பிரம்மநாயகி என்ற திருநாமம் கொடுக்கப்பட்டது. பிரம்ம சம்பத்கௌரி என்ற திருநாமமும் இவருக்கு உள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்