அடங்க மறுத்த காளை.. அடக்கி இழுத்து வந்த சிவபெருமான்.. நந்தியை வழிபட்ட நந்தீஸ்வரர்..!
Nandheeswarar Temple: பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள்தான் இன்று வரை வரலாறுகளை கூறி வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டம் திரு நந்திக்கரை அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்.
Nandheeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரமாண்ட பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். உலகமெங்கும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுத்த வருகின்றார்.
மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. கடவுளுக்கு எல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து சிவபெருமானுக்காக வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர்.
பண்டைய காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் வியக்கம் அளவிற்கு மிகப்பெரிய கோயில்கள் இங்கு இன்றும் இருந்த வருகின்றன.
மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கட்டிடக்கலையின் களஞ்சியமாக திகழ்ந்து வருகின்றது. ஒருபுறம் சோழர்கள் கோயில்கள் கட்டி வந்தனர். மறுபடியும் பாண்டியர்கள் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே பிரம்மாண்ட கோயில்களை கட்டு வந்தனர்.
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள்தான் இன்று வரை வரலாறுகளை கூறி வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டம் திரு நந்திக்கரை அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். இந்த கோயிலில் சிறப்பு என்னவென்றால் இங்கு இருக்கக்கூடிய நந்தியை சிவபெருமான் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
அருகில் இருக்கக்கூடிய ஒரு குன்றின் மீது தகராறு செய்து கொண்டிருந்த காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்த போது அந்த காளையின் பதிந்த கால் தடமும், கயிறு தடமும் இன்று வரை அந்த குன்றின் மீது இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு இருக்கக்கூடிய நட்சத்திரம் மண்டபத்தில் 27 நட்சத்திரங்கள் கொண்ட கண துவாரங்கள் காணப்படுகின்றன.
இது மிகப்பெரிய விசேஷமாக கருதப்படுகிறது. இது நட்சத்திர மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன இவை ஒரு ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்குமாறு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்களும் பொறிக்கப்பட்டு காணப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 12 சிவபெருமான் கோயில்களில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கோயிலை ஓட்ட கோயில் என அழைக்கின்றனர். சிவராத்திரி திருநாளின் போது இந்த 12 கோவில்களுக்கும் ஓடிச்சென்று பக்தர்கள் வழிபாடுகளை நடத்தி வருகின்றன. சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இந்த 12 கோவில்களுக்கும் பக்தர்கள் ஓடிச் செல்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.
தல வரலாறு
முன்பு ஒரு காலத்தில் காலை ஒன்று இந்த பகுதியில் மிகப்பெரிய சிக்கல்களையும், அட்டகாசத்தையும் செய்து வந்தது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் ஊர் மக்கள் தவித்து வந்தனர். இதுகுறித்து ஊர் மக்கள் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்த சிவபெருமானில் வந்து காலையை அடக்கும்படி வேண்டிக் கொண்டனர்.
அதன் பின்னர் சிவபெருமான் அட்டகாசம் செய்து வந்த காளையை அடக்கி இழுத்து வந்தார். அப்போது ஒரு இடத்தில் அந்த காளையை நிறுத்தி வைத்தார். காளை மாடுகள் அமர்ந்த இடம் பள்ளம் ஆகிப்போனது. அந்தப் பள்ளத்தை விட்டு எழ அந்த காளை மறுத்தது. காலப்போக்கில் அதுவே நந்தியாக மாறிவிட்டது.
தற்போது அந்த இடத்தில் ஒரு பள்ளத்தில் நந்தி இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் அந்த நந்தியை பிரதிஷ்டை செய்த இடமாக அது கருதப்படுகிறது. அதன் காரணமாக அந்த இடம் திருநந்தீஸ்வரம் என அழைக்கப்பட்டது.