Marundeeswarar: நோயில் கதறிய இந்திரன்.. பூமிக்கு வந்த தேவர்கள்.. மருந்தை கண்ணுக்கு காட்டிய மருந்தீஸ்வரர்!
Marundeeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்.

Marundeeswarar: மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை அப்பொழுதே கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து இன்று வரை கம்பீரமாக வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. இது போன்ற எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எதிரிகளாக இருந்தாலும் மன்னர்கள் சிவபெருமானை தங்களது குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இன்றுவரை பல பக்தர்கள் இறைவனுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர். இது போன்ற சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் மருந்தீஸ்வரர் எனவும் தாயார் அஞ்சனாட்சியம்பாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம் கூர்மை தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கக்கூடிய தல விருட்சம் கல்லால மரம் ஆகும். தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் இது 26 ஆவது திருத்தலம் ஆகும்.
இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகின்றார். அவருடைய சன்னதி மேற்கு பார்த்தபடி காணப்படுகிறது. இந்த கோயிலில் வந்து வழிபட்டால் வெகு நாட்களாக தீராத நோய்களும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் இங்கு வழிபட்டால் உடல் நோய் நிவர்த்தி மற்றும் குறைவில்லாத வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தல வரலாறு
ஒரு முறை இந்திரனுக்கு சாபத்தின் காரணமாக தீராத நோய் ஒன்று உருவானது. இந்த நோயினால் இந்திரன் மிகவும் அவதிப்பட்டார். தேவலோகத்தில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் அசுவினி தேவர்கள் அவருக்கு பல மருத்துவ உதவிகள் செய்தும் இந்திரனுக்கு நோய் தீரவில்லை.
எனவே இந்த நோயை குணப்படுத்துவதற்காக மூலிகை செடி தேடி தேவர்கள் பூமியை நோக்கி வந்தனர். மருந்துக்காக பல இடங்களில் தேவர்கள் சுற்றி இருந்தன. மருந்து கிடைக்காத காரணத்தினால் இது குறித்து நாரதரிடம் ஆலோசனை கேட்டனர்.
உடனே தற்போது இருக்கக்கூடிய மலையான மருந்து மலையை நாரதர் சுட்டிக்காட்டி இங்கு குடி கொண்டிருக்கும் சிவபெருமான் மற்றும் அம்பாளை வழிபட்டு வந்தால் அவர்களின் அருளால் உங்களுக்கு மருந்து கிடைக்கும் என நாரதர் தேவர்களிடம் கூறியுள்ளார்.
நாரதர் கூறியபடி இந்த இடத்திற்கு வந்த அசுவினி தேவர்கள் இருவரையும் வழிபட்டனர். இவர்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய சிவபெருமான் மருந்து இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் அந்த இடத்திற்குச் சென்ற தேவர்களுக்கு எது மருந்து என்று கண்டுபிடிக்க தெரியவில்லை. மருந்தை கண்டுபிடிக்காமல் அவதிப்பட்ட தேவர்களின் மீது இரக்கம் கொண்ட அம்பாள் மருந்து மூலிகைகளின் மீது ஒளியை பரப்பி காண்பித்தார். இருளை நீக்கி ஒளியை காட்டியதால் இங்கு வீட்டிற்கு கூடிய அம்மன் இருள்நீக்கியம்பாள் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். அதன் பின்னர் தேவர்கள் அதிபலா, பலா என்ற இரண்டு மூலிகைகளை எடுத்துக்கொண்டு தேவலோகம் சென்றனர்.
நோயால் அவதிப்பட்டு வந்த இந்திரனுக்கு அந்த மருந்தை கொடுத்து குணப்படுத்தினார்கள். இந்திரனுக்கு மருந்து கொடுத்து உதவிய காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மருந்தீஸ்வரர் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
