பாறையில் லிங்கத்தைப் பிடித்த அகத்தியர்.. திருமண கோலத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. அருள் வழங்கும் அகத்தீஸ்வரர்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பாறையில் லிங்கத்தைப் பிடித்த அகத்தியர்.. திருமண கோலத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. அருள் வழங்கும் அகத்தீஸ்வரர்..!

பாறையில் லிங்கத்தைப் பிடித்த அகத்தியர்.. திருமண கோலத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. அருள் வழங்கும் அகத்தீஸ்வரர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 08, 2025 06:00 AM IST

Agastheeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் திருச்சுனை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் அகத்தீஸ்வரர் எனவும் தாயார் பாடக வள்ளி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

பாறையில் லிங்கத்தைப் பிடித்த அகத்தியர்.. திருமண கோலத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. அருள் வழங்கும் அகத்தீஸ்வரர்..!
பாறையில் லிங்கத்தைப் பிடித்த அகத்தியர்.. திருமண கோலத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. அருள் வழங்கும் அகத்தீஸ்வரர்..!

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தனக்கென ஒரு உருவம் இல்லாமல் லிங்கத் திருமேனியாக அனைத்து கோயில்களிலும் சிவபெருமான் காட்சி கொடுத்த வருகின்றார்.

மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. ஆதிகாலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. மன்னர்கள் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் தங்களது பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. அதில் சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்களின் கட்டுமானங்களை கண்டு இன்று வரை ஆராய்ச்சியாளர்கள் வியந்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் திருச்சுனை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் அகத்தீஸ்வரர் எனவும் தாயார் பாடக வள்ளி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

தல சிறப்பு

இந்த கோயிலில் பாடகவள்ளி அம்பாள் சுவாமிக்கு இடது புறம் தமிழ் சன்னதியில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி கொடுத்து வருகிறார். குன்றின் மீது சிவபெருமான் காட்சி கொடுப்பது இங்கு மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த திருக்கோயிலில் வழிபட்டால் மன குழப்பங்கள் நீங்கி விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சிவபெருமானின் சன்னதிக்கு பின்புறத்தில் சுனை தீர்த்தம். இருக்கின்றது இது மிகவும் விசேஷ தீர்த்தமாக கருதப்படுகிறது. எந்த கால சூழ்நிலைகளிலும் இந்த தீர்த்தம் எப்போதும் வற்றுவது கிடையாது என கூறப்படுகிறது. சுனை திருத்தத்தை தெளித்து சிவலிங்கத்தை உருவாக்கிய காரணத்தினால் இந்த தீர்த்தம் திருச்சுனை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

தல வரலாறு

திருக்கைலாயத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவருக்கும் திருமணம் நடந்த போது தேவர்கள் மற்றும் அனைவரும் அங்கு ஒன்று கூடினர். இதனால் வடக்கு பகுதி தாழ்ந்து தெற்கு பகுதி உயர்ந்தது. உடனே சிவபெருமான் அகத்தியரை தெற்கு பகுதி பொதிகை மலை நோக்கி அனுப்பினார்.

சிவபெருமான் கூறியது போல தெற்கு பகுதியை நோக்கி அகத்தியர் தனது பயணத்தை தொடங்கினார். குறிப்பாக அனைவரும் சிவபெருமானின் திருமணத்தை காணும் பொழுது தன்னால் மட்டும் காண முடியவில்லை என வருத்தப்பட்டார். அதன் காரணமாக அகத்தியர் செல்லும் இடங்களில் எந்த இடத்தில் சிவபெருமானின் திருமண காட்சியை காண விரும்புகிறாரோ அந்த இடத்தில் சிவபெருமான் மனக்கோளத்தில் காட்சி கொடுத்தார்.

அதன்படி அகத்தியர் தென்திசை நோக்கி வந்த பொழுது பல தலங்களில் சிவபெருமானின் திருமணக் காட்சியை கண்டு தரிசித்தார். அப்போது இந்த பகுதி வழியாக வந்த போது ஒரு பெண் குன்றின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்தார். அப்போது சிவபெருமானின் திருமண கோலத்தை தரிசனம் பெற வேண்டுமென எண்ணினார். சிவபெருமானை தரிசனம் செய்யும் முன்பு நீராட விரும்பினார்.

அப்போது குன்றின் மீது அதிசயமாக பாறையில் சுனை நீர் ஊற்று எடுத்து வந்தது. உடனே தீர்த்தத்தின் நீராடினார் அகத்தியர். சிவபெருமானை வழிபடுவதற்காக அருகில் லிங்கம் ஒன்றை தேடினார். லிங்கம் எதுவும் கிடைக்காத காரணத்தினால் சுனை நீரை பாறையில் தெளித்தார்.

தீர்த்தம் தெளித்ததும் அந்தப் பாறை நெகிழ்வாக மாறி உள்ளது. உடனே அந்தப் பாறையை வைத்து சிவலிங்கமாக பிடித்து அகத்தியர் பூஜைகள் செய்தார். உடனே அதற்கு எதிரில் இருந்த குன்றின் மீது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்தனர். அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த காரணத்தினால் அவர் அகத்தீஸ்வரர் என்ற பெயரை பெற்றார்.

Whats_app_banner