Vaidyanatheshwara: யானையாக மாறிய சோமதத்த மகரிஷி.. லிங்கத்தில் ரத்தம் வரவழைத்த வேடர்கள்.. மருந்து கொடுத்த வைத்தியநாதர்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vaidyanatheshwara: யானையாக மாறிய சோமதத்த மகரிஷி.. லிங்கத்தில் ரத்தம் வரவழைத்த வேடர்கள்.. மருந்து கொடுத்த வைத்தியநாதர்..!

Vaidyanatheshwara: யானையாக மாறிய சோமதத்த மகரிஷி.. லிங்கத்தில் ரத்தம் வரவழைத்த வேடர்கள்.. மருந்து கொடுத்த வைத்தியநாதர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 22, 2025 07:00 AM IST

Vaidyanatheshwara: பழமை மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கர்நாடக மாநிலம் மைசூர் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்.

Vaidyanatheshwara: யானையாக மாறிய சோமதத்த மகரிஷி.. லிங்கத்தில் ரத்தம் வரவழைத்த வேடர்கள்.. மருந்து கொடுத்த வைத்தியநாதர்..!
Vaidyanatheshwara: யானையாக மாறிய சோமதத்த மகரிஷி.. லிங்கத்தில் ரத்தம் வரவழைத்த வேடர்கள்.. மருந்து கொடுத்த வைத்தியநாதர்..!

குறிப்பாக இந்தியாவில் அதிகம் வழங்கப்படும் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் நமது நாட்டில் இருந்துள்ளனர். இருந்து வருகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை சிவபெருமானுக்காக கட்டப்பட்ட கோயில்கள் வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வாழ்ந்து வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

சிவபெருமானுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக பலராலும் நம்பப்பட்டு வருகின்றன. அந்த அளவிற்கு கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை அனைவரும் கட்டி வைத்து சென்றுள்ளனர். ஒரு பக்கம் சோழ மன்னர்களில் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.

மறுபடியும் பாண்டிய மன்னர்கள் மீனாட்சியம்மன் திருக்கோயிலை கட்டி வழிபாடுகளை செய்து வந்துள்ளன. மற்றொரு பக்கம் பல்லவர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அதுபோல எங்கு திரும்பினாலும் திரும்பும் திசையெல்லாம், சிவபெருமானுக்கு நமது தமிழ்நாட்டில் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட பழமை மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கர்நாடக மாநிலம் மைசூர் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

தல சிறப்பு

மைசூரில் இருக்கக்கூடிய அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிவபெருமான் வைத்தியநாதன் எனவும் தாயார் மனோன்மணி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம் கல்யாணி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். இந்த கோயிலில் பொங்கல் தினத்தன்று சொர்க்கவாசல் கடப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. விஷ உயிர் இனங்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைக்கக்கூடிய குழந்தைகள் இங்கு வந்து வழிபட்டால் கல்வி அறிவு அதிகமாக கிடைக்கும் என்பது ஐதீகமாக திகழ்ந்து வருகிறது.

தல வரலாறு

ஒருமுறை முத்தி பெற வேண்டும் என்பதற்காக சோமதத்த மகரிஷி காசி விஸ்வநாதரை வழிபட்டு வந்துள்ளார். அப்போது மகரிஷியின் கனவில் தோன்றிய சிவபெருமான், தட்சிண தேசத்தில் கஜாரன்யம் என்ற காடு இருக்கின்றது. அங்கு சென்று வழிபட்டால் நீ நினைக்கும் வரம் உனக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.

உடனே அதன்படி சோமதத்த மகரிஷி அந்த காட்டிற்கு சென்றுள்ளார். அங்கு யானைகளின் தொந்தரவு அதிகமாக இருந்த காரணத்தினால் மகரிஷியால் பூஜை செய்ய முடியவில்லை. எனவே மகரிஷியும் யானையாக மாறி சிவபெருமானுக்கு பூஜை செய்து வந்தார். ஒருமுறை அந்த காட்டிற்கு வேடர்கள் யானை வேட்டைக்காக வந்துள்ளனர்.

அப்போது யானை வடிவில் சிவபெருமானை வழிபட்டு வந்த சோமதத்த மகரிஷியை வேட்டையர்கள் குறி வைத்துள்ளனர். வேட்டையர்கள் குறி வைத்த அன்பு மகரிஷி மீது படாமல் தவறி அருகில் இருந்த புற்று மீது விழுந்தது. உடனே அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. அந்த இடத்திற்கு வேடர்கள் உடனே வந்துள்ளனர்.

உடனே வானில் இருந்து புற்றினில் சிவனாகிய நான் சுயம்புலிங்கமாக இருக்கிறேன். அம்பு எனது மீது பட்ட காரணத்தினால் ரத்தம் கொட்டுகிறது. இதனை குணப்படுத்தும் மூலிகை நான் கூறும் இடத்தில் இருக்கிறது. அதனை என் மீது போட்டால் சரியாகிவிடும் என அசரீரி கேட்டுள்ளது.

உடனே வேடர்கள் சிவபெருமான் கூறியபடி லிங்கத்திற்கு மருந்து போட்டுள்ளனர். உடனே சிவபெருமான் அங்கு தோன்றி யானையாக இருந்த சோமதத்த மகரிஷி மற்றும் வேடர்களுக்கு முக்தி கொடுத்துள்ளார். காயம் ஏற்பட்டதிற்கு மருந்து கூறிய காரணத்தினால் அவருக்கு வைத்திய நாதர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. காவிரி நதிக்கரையில் இந்த கோயில் அமைந்திருக்கின்ற காரணத்தினால் வேடர்களின் பெயரால் இது தலைக்காடு என அழைக்கப்பட்டு வருகிறது.

 

Whats_app_banner